வீடு / சமையல் குறிப்பு / Mushroom spinach lasagna in cooker

Photo of Mushroom spinach lasagna in cooker by IrsHanA M at BetterButter
361
4
0.0(1)
0

Mushroom spinach lasagna in cooker

Feb-27-2018
IrsHanA M
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • கடினம்
  • டின்னெர் பார்ட்டி
  • இத்தாலிய
  • பேக்கிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேவையான பொருட்கள்:
  2. லசாங்கா ஷீட் - 6-8 / தேவைகேற்ப
  3. ரெட் சாஸ்-1 கப்
  4. வொயிட் சாஸ்-1 கப்
  5. ஃபில்லிங்-1 1/2 கப்
  6. மொஸரெல்லா சீஸ்-200 கிராம்
  7. 1.லசாக்னா ஷீட் செய்ய:
  8. மைதா-100கிராம்
  9. முட்டை-1( விருப்பப்பட்டால்)
  10. உப்பு-1/4 டீஸ்பூன்
  11. தண்ணீர்-தேவைக்கு
  12. ஆலிவ் ஆயில்-2 டீஸ்பூன்
  13. 2.ரெட் சாஸ் செய்ய:
  14. தக்காளி-3(பொடியாக நறுக்கியது)
  15. பூண்டு-2 பல்(பொடியாக நறுக்கியது)
  16. சில்லி ஃப்ளேக்ஸ்-1 டீஸ்பூன்
  17. பெப்பர்-1/2 டீஸ்பூன்
  18. இத்தாலியன் ஹெர்ப்ஸ்-1/2டீஸ்பூன்
  19. சீனி-1 டீஸ்பூன்
  20. உப்பு-தேவைக்கு
  21. ஆலிவ் ஆயில்-1 டேபிள் ஸ்பூன்
  22. 3.வொயிட் சாஸ் செய்ய:
  23. பட்டர்-1 டேபிள் ஸ்பூன்
  24. ஆலிவ் ஆயில்-1 டேபிள் ஸ்பூன்
  25. மைதா-1 டேபிள் ஸ்பூன்
  26. பால்-1கப்
  27. சீஸ்-1/4கப்
  28. பெப்பர்-1/2 டீஸ்பூன்
  29. உப்பு-தேவைக்கு
  30. 4.ஃபில்லிங் செய்ய:
  31. வெங்காயம்-1
  32. பூண்டு-1
  33. காய்கறிகள்-1கப்(கேரட்,பீன்ஸ்,ஸ்வீட் கார்ன்,குடைமிளகாய்)
  34. பசலைக்கீரை-1 கப்(நறுக்கியது)
  35. மஷ்ரூம்-1கப்(நறுக்கியது)
  36. இத்தாலியன் ஹெர்ப்ஸ்-1 டீஸ்பூன்
  37. ரெட் சாஸ்-1 டேபிள் ஸ்பூன்
  38. தக்காளிசாஸ்-1 டீஸ்பூன்
  39. பெப்பர்-1/2 டீஸ்பூன்
  40. சில்லி ப்ளேக்ஸ்-1/2டீஸ்பூன்
  41. எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
  42. உப்பு-தேவைக்கு

வழிமுறைகள்

  1. 1.லசாக்னா ஷீட் செய்ய:
  2. லசாக்னா ஷீட் செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து பிசைந்து 30 நிமிடம் வைக்கவும்.
  3. பின் அதிலிருந்து சிறிய உருளைகள் எடுத்து மெல்லியதாக பரத்தி படத்தில் காட்டியபடி வெட்டி 15நிமிடம் வைக்கவும்.(ஒன்றின் மீது ஒன்று ஒட்டிகொள்ளாமலிருக்க மாவு தூவி கொள்ளவும்)
  4. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து உப்பு சேர்த்து கொதி வந்ததும், செய்து வைத்திருக்கும் ஷீட்களை போட்டு 5நிமிடம் வேகவைத்து குளிர்ந்த நீரில் போட்டு தனியாக எடுத்து வைக்கவும்.
  5. (ரெடிமேட் ஷீட் இல்லையென்றால் இம்முறையை பயன்படுத்தி பாஸ்தா மற்றும் ஷீட் செய்யலாம்)
  6. 2.ரெட் சாஸ் செய்ய:
  7. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து வாசனை வந்த பிறகு தக்காளி சேர்த்து கிளறி மற்ற எல்லா சேர்வைகளையும் சேர்த்து 20நிமிடம் (அல்லது எண்ணெய் பிரியும் வரை) வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
  8. 3.வொயிட் சாஸ் செய்ய:
  9. ஒரு வாணலியில் எண்ணெய் மற்றும் பட்டர் சேர்த்து சூடானதும் மைதா மாவு சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி சிறிதாக கலர் மாறி வரும் போது பால் சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளறி கொதி வந்ததும் சீஸ்,பெப்பர்,உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
  10. 4.ஃபில்லிங் செய்ய:
  11. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து வதக்கி வாசனை வந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  12. அதன் பின் ஒவ்வொரு காய்கறிகளாக சேர்த்து வதக்கவும்.
  13. காய்கறிகள் பாதி வெந்த பிறகு ,மஷ்ரூம்,பசலைக்கீரை,ரெட் சாஸ் சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
  14. இறுதியாக தக்காளி சாஸ்,உப்பு,பெப்பர்,சில்லி சாஸ்,மிக்ஸடு இத்தாலியன் ஹெர்ப்ஸ் சேர்த்து கிளறி ஈரபதம் வற்றியதும் இறக்கவும்.
  15. 5.லேயரிங் செய்ய:
  16. ஒரு பேக்கிங் பான் அல்லது ஃபாயில் தட்டில் எண்ணெய் தடவி வைத்து கொள்ளவும்.
  17. இதில் ஒரு டீஸ்பூன் ரெட் சாஸ் ஊற்றி பரவதடவி கொள்ளவும்.
  18. அதன் மேல் லசாக்னா ஷீட் வைத்து அதன் மேல் 2டீஸ்பூன் ரெட் சாஸ், 2டீஸ்பூன் வொயிட் சாஸ்,3 டீஸ்பூன் ஃபில்லிங் மற்றும் மொஸரெல்லா சீஸ் வைக்கவும்.
  19. மேலும் ஒன்று அல்லது இரண்டு லேயர் இதே போன்று வைத்து கொள்ளவும்.
  20. .
  21. 6.பேக்கிங் செய்ய:
  22. குக்கரில் மணல் அல்லது உப்பு போட்டு அதன்மீது ஒரு தட்டை வைத்து குக்கரை மூடி 10நிமிடஙகள் ப்ரிஹீட் செய்யவும். (ரப்பர் மற்றும் விசில் போடக்கூடாது)
  23. லேயர் செய்து வைத்ததை ப்ரீஹீட் செய்யப்பட்ட குக்கரில் 30-40நிமிடஙகள் அல்லது சீஸ் ப்ரவுண் கலர் ஆகும் வரை குறைந்த தீயில் வைத்து பேக் செய்து எடுக்கவும்
  24. (இதனை ப்ரீ ஹீட் செய்த அவனில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கலாம்)
  25. சுவையான சீஸ் மஷ்ரூம் ஸ்பினச் லசாக்னா தயார்..
  26. சூடாக பரிமாறவும்..

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Feb-28-2018
Kanak Patel   Feb-28-2018

Amazing! great work n lovely picture

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்