முஸ்லிம் மட்டன் குழம்பு | Muslim Mutton Curry in Tamil

எழுதியவர் Disha Khurana  |  13th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Muslim Mutton Curry recipe in Tamil,முஸ்லிம் மட்டன் குழம்பு, Disha Khurana
முஸ்லிம் மட்டன் குழம்புDisha Khurana
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  90

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

2344

0

Video for key ingredients

 • Pav Buns

முஸ்லிம் மட்டன் குழம்பு recipe

முஸ்லிம் மட்டன் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Muslim Mutton Curry in Tamil )

 • 750 கிராம் மட்டன் எலும்பில்லாமல்
 • 400 கிராம் தயிர்
 • 200 கிராம் தக்காளி
 • 200 கிராம் வெங்காயம்
 • 3 பச்சை மிளகாய்
 • 2 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
 • 2 எலுமிச்சை
 • 1.5-2 தேக்கரண்டி காஷ்மீரி சிவப்பு மிளகாய்த் தூள்
 • 1.5 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
 • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 5-6 மிளகு
 • 1-2 பிரிஞ்சி இலை
 • 3-4 ஏலக்காய்
 • 1 இன்ச் இலவங்கப்பட்டை
 • 3-4 கிராம்பு
 • 5-6 தேக்கரண்டி நெய்
 • சுவைக்கேற்ற உப்பு
 • ஒரு பெரிய கையளவு நறுக்கிய கொத்துமல்லி
 • கையளவு புதினா இலைகள்

முஸ்லிம் மட்டன் குழம்பு செய்வது எப்படி | How to make Muslim Mutton Curry in Tamil

 1. மட்டனை நன்றாக இரண்டுமுறை கழுவி கூடுதல் தண்ணீர் மொத்தத்தையும் வடிக்கட்டி மேரினேட் செய்ய விட்டுவைக்கவும்.
 2. இறுதியாக வெங்காயத்தை நறுக்கி கொஞ்சம் உப்பு செர்த்து 10 நிமிடம் வைக்கவும். 10 நிமிடத்திற்குப் பிறகு, கூடுதல் தண்ணீரைப் பிழிந்து பொன்னிறமாகும்வரை பொரித்தெடுக்கவும். உறிஞ்சும் பேப்பரில் எடுத்து வைக்கவும்.
 3. தக்காளியைப் பொடியாக நறுக்கி; இரண்டு எலுமிச்சையின் சாறை நீக்கி எடுத்து வைக்கவும்.
 4. கட்டிகள் இல்லாமல் தயிரை அடித்து பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்க்கவும். நறுக்கியத் தக்காளி, இஞ்சிப்பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, நசுக்கிய வறுத்த வெங்காயத்தைச் சேர்க்கவும். உப்புக் காரம் சரிபார்க்கவும்.
 5. மட்டன் துண்டுகளைச் சேர்த்து கைகளால் அல்லது கரண்டியால் கலந்துவிடவும். பிரிஜ்ஜில் இரவு முழுவதும் மேரினேட் செய்யவும்.
 6. அடுத்த நாள் காலை, பிரிஜ்ஜிலிருந்து மட்டனை எடுத்து அறையின் வெப்பத்திற்குக் கொண்டுவரவும்.
 7. ஒரு கனமான அடிப்பாகமுள்ள ஒரு பாத்திரத்தில் நடுத்தரத் தீயில் நெய்யைச் சூடுபடுத்தி பிரிஞ்சி இலை, மிளகு, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வெடிக்கவைக்கவும். மேரிநேட் செய்த மட்டனை தாளிப்போடு பாத்திரத்தில் உள்ள மேனேஷனோடு கொதிக்கவிடவும்.
 8. கொதி நிலைக்கு வந்ததும், சிம்மில் சிறுதீயில் மூடி 1-1.5 மணி நேரம் இடையிடையே கலக்கி மட்டன் மிருதுவாக எலும்பிலிருந்து உதிரும்வரை வைக்கவும்.
 9. சுவையைச் சரிப்பார்த்து, மட்டன் முழுமையான மிருதுவாக வெந்ததும், நறுக்கிய கொத்துமல்லி புதினா இலைகளால் அலங்கரிக்கவும்.
 10. கேபாபுக்கள் அல்லது மென்மையான வெண்ணெய் பாவ் அல்லது சாதம், வெங்காய சலாதுடன் சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

செய்முறையை துரிதப்படுத்தவேண்டாம், இந்த உணவை மெதுவாக சமைப்பது அருமையானச் சுவையையும் அமைப்பையும் மட்டன் குழம்புக்குக் கொடுக்கும்.

Reviews for Muslim Mutton Curry in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.