வீடு / சமையல் குறிப்பு / முஸ்லிம் மட்டன் குழம்பு

Photo of Muslim Mutton Curry by Disha Khurana at BetterButter
6924
451
4.7(0)
3

முஸ்லிம் மட்டன் குழம்பு

Mar-13-2016
Disha Khurana
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • முகலாய்
 • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. 750 கிராம் மட்டன் எலும்பில்லாமல்
 2. 400 கிராம் தயிர்
 3. 200 கிராம் தக்காளி
 4. 200 கிராம் வெங்காயம்
 5. 3 பச்சை மிளகாய்
 6. 2 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
 7. 2 எலுமிச்சை
 8. 1.5-2 தேக்கரண்டி காஷ்மீரி சிவப்பு மிளகாய்த் தூள்
 9. 1.5 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
 10. 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 11. 5-6 மிளகு
 12. 1-2 பிரிஞ்சி இலை
 13. 3-4 ஏலக்காய்
 14. 1 இன்ச் இலவங்கப்பட்டை
 15. 3-4 கிராம்பு
 16. 5-6 தேக்கரண்டி நெய்
 17. சுவைக்கேற்ற உப்பு
 18. ஒரு பெரிய கையளவு நறுக்கிய கொத்துமல்லி
 19. கையளவு புதினா இலைகள்

வழிமுறைகள்

 1. மட்டனை நன்றாக இரண்டுமுறை கழுவி கூடுதல் தண்ணீர் மொத்தத்தையும் வடிக்கட்டி மேரினேட் செய்ய விட்டுவைக்கவும்.
 2. இறுதியாக வெங்காயத்தை நறுக்கி கொஞ்சம் உப்பு செர்த்து 10 நிமிடம் வைக்கவும். 10 நிமிடத்திற்குப் பிறகு, கூடுதல் தண்ணீரைப் பிழிந்து பொன்னிறமாகும்வரை பொரித்தெடுக்கவும். உறிஞ்சும் பேப்பரில் எடுத்து வைக்கவும்.
 3. தக்காளியைப் பொடியாக நறுக்கி; இரண்டு எலுமிச்சையின் சாறை நீக்கி எடுத்து வைக்கவும்.
 4. கட்டிகள் இல்லாமல் தயிரை அடித்து பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்க்கவும். நறுக்கியத் தக்காளி, இஞ்சிப்பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, நசுக்கிய வறுத்த வெங்காயத்தைச் சேர்க்கவும். உப்புக் காரம் சரிபார்க்கவும்.
 5. மட்டன் துண்டுகளைச் சேர்த்து கைகளால் அல்லது கரண்டியால் கலந்துவிடவும். பிரிஜ்ஜில் இரவு முழுவதும் மேரினேட் செய்யவும்.
 6. அடுத்த நாள் காலை, பிரிஜ்ஜிலிருந்து மட்டனை எடுத்து அறையின் வெப்பத்திற்குக் கொண்டுவரவும்.
 7. ஒரு கனமான அடிப்பாகமுள்ள ஒரு பாத்திரத்தில் நடுத்தரத் தீயில் நெய்யைச் சூடுபடுத்தி பிரிஞ்சி இலை, மிளகு, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வெடிக்கவைக்கவும். மேரிநேட் செய்த மட்டனை தாளிப்போடு பாத்திரத்தில் உள்ள மேனேஷனோடு கொதிக்கவிடவும்.
 8. கொதி நிலைக்கு வந்ததும், சிம்மில் சிறுதீயில் மூடி 1-1.5 மணி நேரம் இடையிடையே கலக்கி மட்டன் மிருதுவாக எலும்பிலிருந்து உதிரும்வரை வைக்கவும்.
 9. சுவையைச் சரிப்பார்த்து, மட்டன் முழுமையான மிருதுவாக வெந்ததும், நறுக்கிய கொத்துமல்லி புதினா இலைகளால் அலங்கரிக்கவும்.
 10. கேபாபுக்கள் அல்லது மென்மையான வெண்ணெய் பாவ் அல்லது சாதம், வெங்காய சலாதுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்