வீடு / சமையல் குறிப்பு / கோவா ஸ்டைல் பனீர் பட்டாணி கிரேவி

Photo of Goan style paneer peas gravy by Sowmya Sundar at BetterButter
383
7
0.0(0)
0

கோவா ஸ்டைல் பனீர் பட்டாணி கிரேவி

Mar-01-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோவா ஸ்டைல் பனீர் பட்டாணி கிரேவி செய்முறை பற்றி

புதிதாக வறுத்து அரைத்த மசாலா சேர்த்து செய்யும் கோவா ஸ்டைல் பனீர் கிரேவி் வகை இது. பால், வெண்ணெய் மற்றும் பனீர் சேர்த்து இருப்பதால் சுவையானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • கோவா
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பனீர் துண்டுகள் - 1 கப்
  2. வெங்காயம்-2
  3. தக்காளி- 2
  4. வேக வைத்த பச்சை பட்டாணி -1/2 கப்
  5. பூண்டு- 6 பல்
  6. தேங்காய் துருவிய-1/4 மூடி
  7. பால் -1/2 கப்
  8. வெண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
  9. சீரகம்-1 டீஸ்பூன்
  10. கரம் மசாலா -1/2 டீஸ்பூன்
  11. உப்பு
  12. வறுத்து பொடி செய்ய:
  13. பட்டை -2
  14. லவங்கம்-2
  15. கசகசா- 2 டீஸ்பூன்
  16. மிளகு- 1 டீஸ்பூன்
  17. தனியா -2 டீஸ்பூன்
  18. மிளகு வற்றல்-5
  19. எண்ணெய்- 3 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை நேரடியாக தணலில் தோல் கறுப்பாகும் வரை வாட்டி கொள்ளவும்.
  2. பின் தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும்
  3. ஒரு கப் தண்ணீர் விட்டு தக்காளியை அதில் போட்டு கொதிக்க விட்டு தோல் நீக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தும் மற்றும் பூண்டு, தேங்காய் சேர்த்து சிவக்க வறுத்து கொள்ளவும்.
  5. வறுத்த பொருட்கள் மற்றும் நறுக்கிய வெங்காயம் ,தண்ணீர் சிறிதளவு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்
  6. கடாயில் வெண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து அரைத்த விழுது ,தக்காளி சாறு உப்பு சர்க்கரை சேர்த்து பத்து நிமிடம் வெண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்
  7. பின்னர் அதில் கரம் மசாலா தூள், பால் ,வேக வைத்த பட்டாணி மற்றும் பனீர் துண்டுகள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
  8. கோவா பனீர் பீஸ் மசாலா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்