Photo of Kadai panneer by Kaushika Segaran at BetterButter
368
9
0.0(2)
0

Kadai panneer

Mar-01-2018
Kaushika Segaran
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Kadai panneer செய்முறை பற்றி

சுவையான பன்னீர்.ஆரோக்கிய சமையல்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னீர் - 2 கப்
  2. கொடை மிளகாய் - 2
  3. வெங்காயம் - 2
  4. தக்காளி - 2
  5. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி
  6. மஞ்சள் தூள் - 1 மேஜை கரண்டி
  7. கரம் மசாலா தூள் - 1 மேஜை கரண்டி
  8. மல்லி தூள் - 1 மேஜை கரண்டி
  9. காய்ந்த வெந்தய இலைகள் - 1 மேஜை கரண்டி
  10. க்ரீம் - 1 கப்
  11. வெண்ணெய் - 1 மேஜை கரண்டி
  12. கொத்தமல்லி - அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. கொடை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. வெங்காயத்தை அரைத்து கொள்ளவும்.
  4. தக்காளியை அரைத்து கொள்ளவும்.
  5. ஒரு வாணலியில் வெண்ணெய் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலக்கவும்.
  6. அதில் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
  7. பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
  8. அதில் நறுக்கிய கொடை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
  9. பின் அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலக்கவும்.
  10. சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலக்கவும்.
  11. பின் அதில் பன்னீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
  12. அதில் க்ரீம் மற்றும் காய்ந்த வெந்தய இலையை சேர்த்து கலக்கவும்.
  13. பின் கொத்தமல்லி இலையை சேர்த்து இரக்கவும்.
  14. சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
கவி சினி கவி
Mar-02-2018
கவி சினி கவி   Mar-02-2018

Pushpa Taroor
Mar-01-2018
Pushpa Taroor   Mar-01-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்