Photo of Milk agar agar by Asiya Omar at BetterButter
1244
8
0.0(1)
0

Milk agar agar

Mar-01-2018
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Milk agar agar செய்முறை பற்றி

கடற்பாசி,பால் நட்ஸ் சேர்த்து காய்ச்சி உறைய வைத்தால் ஆரோக்கியம்,சுவையும் கூட.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • ஈத்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடற்பாசி - ஒரு கையளவு புல் போல் இருக்கும் ( 10 கிராம்)
  2. சீனி -6 மேஜைக்கரண்டி
  3. பால் கால் லிட்டர்
  4. தண்ணீர் அரை லிட்டர்.
  5. வெனிலா எசன்ஸ் விரும்பினால் -1/2 தேக்கரண்டி
  6. கலர் அல்லது ரோஸ் மில்க் ,பாதாம் எசன்ஸ் சேர்க்கலாம்.
  7. அலங்கரிக்க பாதாம்,முந்திரி நறுக்கியது சிறிது.

வழிமுறைகள்

  1. பாக்கெட்டில் கடற்பாசி புல் போல் வரும்.ஒரு கையளவு.
  2. 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  3. கால் லிட்டர் பால் காய்ச்சி வைக்கவும்.
  4. அரை லிட்டர் தண்ணீரில், ஊற வைத்த அகார் அகார் சேர்த்து காய்ச்சவும்.கரைந்து வரும் ,சீனி சேர்க்கவும்,சீனி கரையவும் காய்ச்சிய பாலில் ,கடற்பாசி காய்ச்சியதை வடிகட்டி சேர்க்கவும்.
  5. விரும்பினால் வெனிலா எசன்ஸ் 1/2 தேக்கரண்டி கலக்கலாம்.
  6. ஒரு தட்டில் பரவலாக ஊற்றி மேலே நட்ஸ் தூவவும். உறைய வைக்க ப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து சில்லென்று பரிமாறலாம்.வெளியே வைத்தாலும் 1 மணிக்குள் உரைந்து விடும்.
  7. வெளியே எடுத்து துண்டு போட்டு பரிமாறலாம்.விரும்பினால் நட்ஸ் ,கலர் சேர்க்கலாம்.
  8. உங்கள் விருப்பம் போல் நட்ஸ் அலங்கரித்தும் செய்யலாம்.சுவையான பால் சேர்த்த கடற்பாசி தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Paramasivam Sumathi
Mar-02-2018
Paramasivam Sumathi   Mar-02-2018

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்