Photo of Dahi poori by Asiya Omar at BetterButter
947
8
0.0(0)
0

தயிர் பூரி

Mar-01-2018
Asiya Omar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தயிர் பூரி செய்முறை பற்றி

பிரசித்தமான வட இந்திய உணவு.வீட்டில் செய்து அசத்தலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கடினம்
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரெடிமேட் பூரி தேவைக்கு அல்லது
  2. வீட்டில் பூரி செய்ய:-
  3. கோதுமை மாவு - அரை கப்
  4. ரவை -1 கப்
  5. பேக்கிங் சோடா -2 பின்ச்
  6. உப்பு,தண்ணீர் தேவைக்கு.
  7. எண்ணெய் பொரிக்க.
  8. உள் அடக்கம் தயார் செய்ய:-
  9. வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2
  10. சாட் மசாலா -1 தேக்கரண்டி
  11. ஓமப்பொடி,காரபூந்தி -1/2 கப்
  12. இனிப்பு புளிப்பு சட்னி செய்ய:-
  13. பேரீச்சை -6
  14. உலர் திராட்சை -1 மேஜைக்கரண்டி
  15. புளி - நெல்லியளவு
  16. பொடித்த வெல்லம்-2 மேஜைக்கரண்டி
  17. மிளகாய்த்தூள் -1/2 தேக்கரண்டி
  18. உப்பு - தேவைக்கு.
  19. நறுக்கிய மல்லி இலை அலங்கரிக்க
  20. கெட்டிதயிர் - 2 கப்
  21. நறுக்கிய மல்லி இலை
  22. மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி
  23. வறுத்த சீர்கத்தூள் - 1/2 தேக்கரண்டி
  24. உப்பு - சுவைக்கு.

வழிமுறைகள்

  1. முதலில் பேரீச்சை,உலர் திராட்சை அரை கப் தண்ணீரில் புளி ஊற வைத்தது அத்துடன் மிளகாய்த்தூள் வெல்லம் சேர்த்து அரைக்கவும்.
  2. அதனை அரைகப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து எடுக்கவும்.
  3. பூரி செய்வதாய் இருந்தால் நான் மேற்சொன்ன பொருட்கள் சேர்த்து தயார் செய்து பொரித்து எடுத்து வைக்கவும்.
  4. நான் ரெடிமேட் பூரி உபயோகித்தேன். உருளைக்கிழங்கு வேக வைத்து மசித்து எடுத்து சாட் மசாலா சேர்த்து வைக்கவும்.
  5. பூரியை கவனமாக மேற்புறம் சிறிய ஓட்டை போடவும்.
  6. அதனில் மசித்த உருளை ஒரிரு தேக்கரண்ட வைக்கவும்.
  7. இனிப்பு புளிப்பு சட்னி ஒரு தேக்கரண்டி விடவும்.
  8. அதன் பின்பு அடித்து வைத்த தயிர் மேலே ஊற்றி மிளகாய்த்தூள் தூவி ஓமப்பொடி,காரபூந்தி தூவி மல்லி இலை அலங்கரித்து பரிமாறலாம்.
  9. சுவையான சத்தான தயிர் பூரி வீட்டிலேயே தயார்.செமை.என் பிள்ளைகளுக்கு சாட் அயிட்டம் ரொம்ப பிடிக்கும்.வீட்டில் தான் செய்து கொடுப்பேன்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்