வீடு / சமையல் குறிப்பு / மெக்சிகன் சீஸி வெஜிடபிள் ரைஸ்

Photo of Mexican cheesy vegetable rice by Sowmya Sundar at BetterButter
45
7
0.0(0)
0

மெக்சிகன் சீஸி வெஜிடபிள் ரைஸ்

Mar-01-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மெக்சிகன் சீஸி வெஜிடபிள் ரைஸ் செய்முறை பற்றி

மெக்சிகன் நாட்டு ரைஸ் வெரைட்டி ஆன இது மிளகாய் மற்றும் பூண்டை வறுத்து பொடி செய்து சீஸ் கலந்து செய்யும் சுவையான உணவாகும். ஒரே குக்கரில் ஒன் பாட் மீலாக சுலபமாக செய்து விடலாம்.காய்கறிகள் மற்றும் சீஸ் சேர்த்து இருப்பதால் சத்தானதும் கூட.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • மெக்ஸிகன்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி-1 கப்
  2. தண்ணீர்- 1 1/2 கப்
  3. சீஸ் -1/2 கப்
  4. வெண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
  5. வெங்காயம்-1
  6. குடைமிளகாய்,பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு சேர்த்து- 1 கப்
  7. உப்பு
  8. காஷ்மீர் மிளகாய் வற்றல்-3
  9. பூண்டு- 3 பல்
  10. எண்ணெய் 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் அல்லது பானில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல் மற்றும் பூண்டை நன்றாக வறுத்து கொள்ளவும்
  2. அதை மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்
  3. அதே பானில் வெண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின்னர் அதனுடன் நறுக்கிய காய்கறிகள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  5. சிறிது வதங்கியதும் பொடி செய்து வைத்ததை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி களைந்து வைத்த அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து சிம்மில் வேக விடவும். குக்கராக இருந்தால் இரண்டு விசில் வரை விடலாம்.
  6. நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து துருவிய சீஸ் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்