வீடு / சமையல் குறிப்பு / சேமியா பாயசம்

Photo of Semiya paayasam by Yasmin Shabira at BetterButter
512
7
0.0(0)
0

சேமியா பாயசம்

Mar-01-2018
Yasmin Shabira
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சேமியா பாயசம் செய்முறை பற்றி

மிகவும் சுவையான ஈசியான பாயசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேமியா - 200 கிராம்
  2. பால் - 4 கப்
  3. ஜீனி - 1 1/2 கப்
  4. நெய் - 3 மேசைக்கரண்டி
  5. முந்திரி - 10
  6. திராட்சை - 10
  7. ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்..
  2. பின் அதே கடாயில் சேமியாவை மணம் வரும் வரை வறுக்கவும்...
  3. பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்... தேவையெனில் இன்னும் சற்று தண்ணீர் ஊற்றலாம்...
  4. சேமியா நன்றாக வெந்த பிறகு ஜீனி சேர்த்து ஜீனி நன்றாக கரையும் வரை குறைந்த தீயில் கொதிக்க விடவும்...
  5. ஜீனி நன்றாக கரைந்து ஒன்று சேர்ந்த பி்ன் பால் சேர்த்து அதிக தீயில் வைத்து பொங்கி வந்ததும் இறக்கிவிடவும்...
  6. பிறகு அதில் ஏலக்காய் பொடி தூவி வறுத்து வைத்த முந்திரி மற்றும் திராட்சையை தூவினால் சுவையான அனைவருக்கும் பிடித்த சேமியா பாயசம் ரெடி!!!!!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்