கமன் டோக்ளா | Khaman dhokla in Tamil

எழுதியவர் Subashini Krish  |  1st Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Khaman dhokla by Subashini Krish at BetterButter
கமன் டோக்ளாSubashini Krish
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

1

0

கமன் டோக்ளா recipe

கமன் டோக்ளா தேவையான பொருட்கள் ( Ingredients to make Khaman dhokla in Tamil )

 • தயிர் 11/2 கப்
 • கடலைமாவு 1 கப்
 • இஞ்சி பச்சைமிளகாய் விழுது 1 மேஜைக்கரண்டி
 • மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
 • ஈனோ 1 டீஸ்பூன்
 • உப்பு தேவைக்கேற்ப
 • எலுமிச்சை பழம் பாதி
 • சர்க்கரை 2 மேஜைக்கரண்டி
 • கடுகு 1 டீஸ்பூன்
 • வெள்ளை எள் 1 மேஜைக்கரண்டி
 • பெருங்காயம் 1/4 டீஸ்பூன்
 • தேங்காய் துருவல் 2 மேஜைக்கரண்டி
 • கறிவேப்பிலை சிறிது
 • கொத்தமல்லி தழை சிறிது
 • பச்சை மிளகாய் 1 பொடியாக நறுக்கியது

கமன் டோக்ளா செய்வது எப்படி | How to make Khaman dhokla in Tamil

 1. கடலை மாவை சலித்துக் கொள்ளவும்
 2. ஒரு அகண்ட பாத்திரத்தில் தயிர், உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பச்சை மிளகாய் விழுது ,எலுமிச்சை சாறு,சேர்த்து கலக்கவும்
 3. இதில் கடலை மாவு சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்
 4. இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
 5. கடலைமாவு கலவையில் ஈனோ சேர்த்து கலக்கி தட்டையான பாத்திரம் அல்லது விருப்பமான வடிவங்களில் முக்கால் பாகம் ஊற்றி 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்
 6. ஒரு தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வெள்ளை எள், நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயம், சர்க்கரை ,அரை கப் தண்ணீர், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து கொதிக்க விட்டு டோக்ளாவின் மேலே பரவலாக ஊற்றவும். துருவிய தேங்காய் சேர்க்கவும்
 7. பச்சை சட்னி அல்லது இனிப்பு சட்னியுடன் பரிமாறவும்

எனது டிப்:

நான் குழி இட்லித்தட்டு உபயோகித்துள்ளேன்.பெரிய கிண்ணத்தில் ஊற்றி சிறிய துண்டாகவும் வெட்டி கொள்ளலாம்

Reviews for Khaman dhokla in tamil (0)