வீடு / சமையல் குறிப்பு / கமன் டோக்ளா

Photo of Khaman dhokla by Subashini Krish at BetterButter
120
7
0.0(0)
0

கமன் டோக்ளா

Mar-01-2018
Subashini Krish
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கமன் டோக்ளா செய்முறை பற்றி

இது ஒரு குஜராத்தி சிறப்பு உணவாகும். தயிர் இதன் பிரதான மூலக்கூறாகும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • குஜராத்
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தயிர் 11/2 கப்
  2. கடலைமாவு 1 கப்
  3. இஞ்சி பச்சைமிளகாய் விழுது 1 மேஜைக்கரண்டி
  4. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  5. ஈனோ 1 டீஸ்பூன்
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. எலுமிச்சை பழம் பாதி
  8. சர்க்கரை 2 மேஜைக்கரண்டி
  9. கடுகு 1 டீஸ்பூன்
  10. வெள்ளை எள் 1 மேஜைக்கரண்டி
  11. பெருங்காயம் 1/4 டீஸ்பூன்
  12. தேங்காய் துருவல் 2 மேஜைக்கரண்டி
  13. கறிவேப்பிலை சிறிது
  14. கொத்தமல்லி தழை சிறிது
  15. பச்சை மிளகாய் 1 பொடியாக நறுக்கியது

வழிமுறைகள்

  1. கடலை மாவை சலித்துக் கொள்ளவும்
  2. ஒரு அகண்ட பாத்திரத்தில் தயிர், உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பச்சை மிளகாய் விழுது ,எலுமிச்சை சாறு,சேர்த்து கலக்கவும்
  3. இதில் கடலை மாவு சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  4. இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  5. கடலைமாவு கலவையில் ஈனோ சேர்த்து கலக்கி தட்டையான பாத்திரம் அல்லது விருப்பமான வடிவங்களில் முக்கால் பாகம் ஊற்றி 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்
  6. ஒரு தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வெள்ளை எள், நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயம், சர்க்கரை ,அரை கப் தண்ணீர், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து கொதிக்க விட்டு டோக்ளாவின் மேலே பரவலாக ஊற்றவும். துருவிய தேங்காய் சேர்க்கவும்
  7. பச்சை சட்னி அல்லது இனிப்பு சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்