Photo of Fried ice cream by Nur Aishah Vimala at BetterButter
1056
10
0.0(4)
0

Fried ice cream

Mar-02-2018
Nur Aishah Vimala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
1 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Fried ice cream செய்முறை பற்றி

ஐஸ்கிரீமை வெயில் காலங்களில் அனைவரும் சாப்பிட்டு மகிழ்வார்கள். ஆனால் எத்தனை பேர் வெளியில் சூடாக மொறு மொறுவென்றும் உள்ளே சில்லென்றும் சாப்பிட்டிருக்கிறீர்கள். செய்து பாருங்கள், அதன் மேல் காதல் கொள்வீர்.. :grinning:

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உங்களுக்கு பிடித்த ஐஸ்கிரிம் வகைகள் 3 மே. கரண்டி
  2. சான்விச் ரொட்டி 6 ஸ்லைஸ்

வழிமுறைகள்

  1. ரொட்டியின் மேல் ஒரு கரண்டி ஐஸ்கிரீம் வையுங்கள்
  2. அதன் மேல் இன்னொரு ரொட்டி வைத்து மூடி ஒரு டம்ளர் அல்லது கப்பால் வெட்டவும்
  3. இப்படி வெட்டி எடுத்தால் ஓரங்களில் நன்றாக ஒட்டிக்கொள்ளும். அப்படி இல்லை என்றால் கையால் நன்றாக அழுத்தி ஒட்டிக்கொள்ளவும்
  4. இதேபோல் அனைத்தையும் செய்து பிறகு குளிர்சாதனப்பெட்டி உறையும் இடத்தில் ஒரு நாளுக்கு அல்லது நன்றாக கெட்டியாக உறையும் வரை வைக்கவும்
  5. நல்ல சூடான கொதிக்கும் எண்ணெயில் போட்டு ஏறக்குறைய 30 விநாடிகள் பொரித்து எடுத்து உடனே பரிமாறவும்.

மதிப்பீடு (4)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ayesha Ziana
Mar-07-2018
Ayesha Ziana   Mar-07-2018

Superb

Pushpa Taroor
Mar-02-2018
Pushpa Taroor   Mar-02-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்