Photo of Wheat Milk dumplings by Preethi Ramesh at BetterButter
914
7
0.0(1)
0

Wheat Milk dumplings

Mar-02-2018
Preethi Ramesh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு- 1 கப்
  2. வெல்லம்- 1 1/2 கப்
  3. பால்- 1/2 கப்
  4. முதல் கெட்டியான தேங்காய் பால்- 1 கப்
  5. இரண்டாவது தேங்காய் பால்- 2 கப்
  6. வெந்நீர்- மாவு பிசைவதற்கு ஏற்ப
  7. உப்பு- 1/2 தேக்கரண்டி
  8. நெய்- மாவு பிசைய சிறிதளவு
  9. ஏலக்காய் தூள்- 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கப் கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, சிறிது வெந்நீர் மற்றும் நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
  2. மாவை 5 நிமிடம் மூடி வைக்கவும்.
  3. 5 நிமிடத்திற்கு பிறகு கைகளில் நெய் தடவி சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  4. அடி கனமான பாத்திரத்தில் பசும்பால், இரண்டாவது தேங்காய் பால் ஊற்றி காஸ் பற்ற வைக்கவும்.
  5. 2 மேசைக்கரண்டி அரிசி மாவை சிறிது தண்ணீரில் கலந்து அவற்றில் சேர்க்கவும்.
  6. ஒரு கொதி வந்த பிறகு உருட்டி வைத்துள்ள உருண்டைகள் மெதுவாக சேர்க்கவும். 2 நிமிடங்களுக்கு கிளருதல் கூடாது.
  7. பாத்திரத்தை மூடி 10 நிமிடங்கள் மத்திமம் தீயில் வேக வைக்கவும்.இடையிடையே திறந்து மெதுவாக கிளறி விட வேண்டும்.
  8. இதற்கிடையில் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் நீர் சேர்த்து கரையும் வரை சூடாக்கவும்.பின் வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
  9. 10 நிமிடங்களுக்கு பின் வெல்லப்பாகை சேர்க்கவும்.
  10. 2 நிமிடங்களுக்கு பிறகு உருண்டைகள் வெந்தவுடன் முதல் கெட்டியான தேங்காய்ப்பாலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் ஏலம் கலந்து இறக்கவும்.
  11. சுவையான சத்துள்ள கோதுமை பால் கொழுக்கட்டை தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sheetal Sharma
Mar-06-2018
Sheetal Sharma   Mar-06-2018

nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்