ஷேஷ்வான் சாஸ் | Schezwan Sauce in Tamil

எழுதியவர் sapana behl  |  15th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Schezwan Sauce by sapana behl at BetterButter
ஷேஷ்வான் சாஸ்sapana behl
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

881

0

ஷேஷ்வான் சாஸ் recipe

ஷேஷ்வான் சாஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Schezwan Sauce in Tamil )

  • 1 கப் தண்ணீர்
  • 1 தேக்கரண்டி சர்க்கரை
  • 2 தேக்கரண்டி வெனிகர்
  • 4 தேக்கரண்டி எண்ணெய்
  • சுவைக்கேற்ற உப்பு
  • சுவைக்கேற்ற மிளகு
  • 1 வெள்ளை வெங்காயம், நறுக்கியது
  • 1 தேக்கரண்டி சோயா சாஸ்
  • 1 தேக்கரண்டி இஞ்சி, துருவல்
  • 3-4 சிஹூவான் மிளகு
  • 5-6 பூண்டு பற்கள், பொடியாக நறுக்கியது
  • 1 தேக்கரண்டி இஞ்சி துருவல்
  • 20-25 காய்ந்த மிளகாய், விதைகள் நீக்கப்பட்டது

ஷேஷ்வான் சாஸ் செய்வது எப்படி | How to make Schezwan Sauce in Tamil

  1. சிவப்பு மிளகாயைக் கழுவி சூடான நீரில் 2-3 மணி நேரம் ஊறவைக்கவும். சிறிது தண்ணீர் பயன்படுத்தி மென்மையான ஒரு சாந்தை அரைத்துக்கொள்ளவும். ஒரு சாஸ் பாத்திரத்தில் எண்ணெயைச் சூடுபடுத்தி பூண்டு சேர்க்கவும். பொன்னிறமாக வரும்வரை வதக்கவும்.
  2. இப்போது இஞ்சி வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் மிருதுவாகும்வரை வதக்கி சிவப்பு மிளகாய் சாந்தைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்து 1 கப் தண்ணீர் சேர்க்கவும். சாஸ் அடர்த்தியாகும்வரை சமைக்கவும்.
  3. சோயா சாசைச் சேர்த்து உப்பு மிளகுடன் சுவையூட்டவும். இறுதியாக சர்க்கரை வெனிகர் சேர்க்கவும். ஆறவைத்து காற்றுப்புகாத ஜாரில் சேமிக்கவும். பிரிஜ்ஜில் வைக்கவும்.
  4. மமூஸ், ஸ்பிரிங் ரோல் அல்லது பிரைட் ரைஸ், நூடுல்ஸ் அல்லது சூடான சூப்புகளுக்கான தொட்டுக்கையாகப் பயன்படுத்தவும்.

Reviews for Schezwan Sauce in tamil (0)