வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் மோர்க்குழம்பு

Photo of Okra buttermilk curry by Asiya Omar at BetterButter
583
8
0.0(0)
0

வெண்டைக்காய் மோர்க்குழம்பு

Mar-02-2018
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் மோர்க்குழம்பு செய்முறை பற்றி

மோர்க்குழம்பு வெண்டைக்காயில் சூப்பராக இருக்கும்.இந்த முறையில் செய்து பாருங்க.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண்டைக்காய் -1/4 கிலோ
  2. மோர் - 300- 500 மில்லி
  3. உப்பு - சுவைக்கு.
  4. வறுத்து அரைக்க:-
  5. துவரம் பருப்பு -1 தேக்கரண்டி
  6. கடலை பருப்பு -1 தேக்கரண்டி
  7. அரிசி -1 தேக்கரண்டி
  8. மிளகாய் வற்றல்-2
  9. மிளகு - 1/4 தேக்கரண்டி
  10. சீரகம்-1/2 தேக்கரண்டி
  11. தேங்காய்த்துருவல் - 2-3 மேஜைக்கரண்டி
  12. தாளிக்க:-
  13. எண்ணெய் -2-3 மேஜைக்கரண்டி
  14. கடுகு,உ.பருப்பு-தலா 1/2 தேக்கரண்டி
  15. கிள்ளிய மிளகாய் வற்றல் -1
  16. வெந்தயம் -1/4 தேக்கரண்டி
  17. பெருங்காயம்-2 பின்ச்
  18. கறிவேப்பிலை -2 இணுக்கு
  19. நறுக்கிய சின்ன வெங்காயம் -6 ( விரும்பினால்)

வழிமுறைகள்

  1. இளஞ்சிவப்பாக அரிசி,துவரம் பருப்பு,கடலை பருப்பு வறுத்து எடுக்கவும்.
  2. அதே வாணலியில் மிளகு,சீரகம் லேசாக வெதுப்பி விட்டு தேங்காய்த்துருவல் போட்டு வறுத்து எடுக்கவும்.
  3. ஆறியவுடன் தண்ணீர் சேர்த்து பட்டுபோல் அரைத்து வைக்கவும்.
  4. வெண்டைக்காயை நன்கு அலசி ,துடைத்து துண்டு போட்டுக் கொள்ளவும்.
  5. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு,உ.பருப்பு,வெந்தயம்,வற்றல்,கருவேப்பிலை பெருங்காயம் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயம் விரும்பினால் சேர்த்து வதக்கி வெண்டைக்காய்,சுவைக்கு உப்பு சேர்க்கவும்.
  6. வெண்டைக்காய் சுருள வதங்க வேண்டும்
  7. வறுத்து அரைத்ததை சேர்க்கவும்.தேவைக்கு தண்ணீர் சேர்த்து ஒன்று சேர்ந்து கொதிக்க வைக்கவும்.உப்பு சுவைக்கு சேர்க்கவும்.
  8. குழம்பு வெந்து குழ குழவென்று இருக்கும்.
  9. வெண்டைக்காய் குழம்புடன் சேர்ந்து வெந்து வரும் .அடித்து வைத்த மோர் சேர்க்கவும்.மோர் மிதமான புளிப்பில் இருக்க வேண்டும்
  10. மோர் சேர்த்தவுடன் குழ குழப்பு மாறி விடும் சூப்பராக இருக்கும்.
  11. சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.
  12. சூடான சாதத்திற்கு செம பொருத்தம்.குழம்பில் உள்ள வெண்டைக்காய் ருசி அருமை.
  13. வறுத்து அரைத்து செய்வதால் செம ருசி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்