வீடு / சமையல் குறிப்பு / டிபன் சாம்பார்

Photo of Tiffin Sambhar by Lakshmi Vasanth at BetterButter
889
17
4.0(0)
0

டிபன் சாம்பார்

Mar-15-2016
Lakshmi Vasanth
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் – 1 எண்ணிக்கை
  2. சோளமாவு – 1 தேக்கரண்டி
  3. தேங்காய் பால் – 2 தேக்கரண்டி
  4. சர்க்கரை – 2 தேக்கரண்டி
  5. சுவைக்கு உப்பு
  6. கொத்துமல்லி இலைகள்
  7. சாந்தாக அரைத்துக்கொள்ளவும்: தக்காளி – 2எண்ணிக்கை
  8. எள்ளு விதை - 3 தேக்கரண்டி
  9. சாம்பார் பொடி – 1 தேக்கரண்டி
  10. மிளகாய்ப் பொடி – 1 தேக்கரண்டி
  11. மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
  12. சீரகம் – ½ தேக்கரண்டி
  13. தாளிப்புக்கு – கடுகு மற்றும் கரிவேப்பிலை

வழிமுறைகள்

  1. தக்காளியை கால்கால் பங்காக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பிளடரில் தக்காளி, மிளகாய்த்தூள், சாம்பார் பொடி, மல்லித்தூள், எள்ளு விதை, சீரகம் சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்க.
  2. ஒரு கடாயை எடுத்து எண்ணெய் விட்டு மிளகு கரிவேப்பிலை சேர்க்கவும் – பொறிய ஆரம்பித்ததும் அரைத்து வைத்துள்ள சாந்தைச் சேர்க்கவும். பிளண்டரை 3 கப் தண்ணீரால் கழுவி இந்தத் தண்ணீரை சாந்துடன் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
  3. பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயத்தை கொதிக்க வைப்பதற்காக வைத்துள்ள இந்த கலவையுடன் சேர்க்கவும். (வெங்காயத்தை எண்ணெயில் வறுக்கவேண்டாம், சுவை மாறிவிடும்). உப்பு, சர்க்கரை, சாம்பார் பொடியை இந்த சமயத்தில் சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.
  4. வெங்காயம் பளிச்சென்று ஆனதைப் பார்த்ததும் – 1 கப் தண்ணீரில் சோளமாவு தேங்காய்ப்பால் கலவையைச் செய்து நன்றாகக் கலக்கிக்ககொள்ளவும். கொதிக்கும் சாம்பாரில் இந்தக் கலவையைச் சேர்த்துத் தொடர்ந்து கிண்டவும்.
  5. சாம்பார் அடர்த்தியாவதை நீங்கள் பார்ப்பீர்கள். சாம்பார் பதத்தை நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப சரிசெய்துகொள்ளலாம். இப்போது இந்த கலவையை 3 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும். தீயிலிருந்து இறக்கி கொத்துமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
  6. இட்லி/மெது வடையோடு சூடாகப் பரிமாறவும். குறிப்பு: இந்தச் சாம்பாருடன் பெருங்காயம் சேர்க்காதீர்கள், ருசி நன்றாக இருக்காது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்