Photo of Milk Rava Dryfruits Cake by Sowmya Sundar at BetterButter
566
11
4.5(3)
0

Milk Rava Dryfruits Cake

Mar-04-2018
Sowmya Sundar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Milk Rava Dryfruits Cake செய்முறை பற்றி

பால் தயிர் வெண்ணெய் என பால் பொருட்கள் அனைத்தும் சேர்த்து செய்யும் சுவையான ரவை கேக் இது. மைதா இல்லாமல் ரவையை கொண்டு செய்தது.டிரை ஃப்ரூட்ஸ் மற்றும் பால் பொருட்கள் சேர்த்து இருப்பதால் குழந்தைகளுக்கு சத்தானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • இந்திய
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் - 1 கப்
  2. தயிர் -1/4 கப்
  3. வெண்ணெய் -1/2 கப்
  4. ரவை - 2 கப்
  5. சர்க்கரை- 1 1/4 கப்
  6. ஏலக்காய் பொடி-1/2 டீஸ்பூன்
  7. வெனிலா எசன்ஸ் -1 டீஸ்பூன்
  8. பாதாம் வால்நட் முந்திரி கிஸ்மிஸ் டிரை ஃப்ரூட்ஸ் - சேர்த்து 1/2 கப்
  9. பேக்கிங் பவுடர்-1 டீஸ்பூன்
  10. பேக்கிங் சோடா-1/2 டீஸ்பூன்
  11. மைதா -1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சக்கரை சேர்த்து சாப்ட் ஆக ஆகும் வரை நன்றாக அடித்து கலந்து கொள்ளவும்
  2. பின்னர் அதனுடன் ரவை தயிர் பாலை சேர்த்து நன்கு கலந்து கொண்டு ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  3. பின் அதனில் ஏலக்காய் பொடி வெனிலா எசன்ஸ் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும். ஊறிய பிறகு மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து கொள்ளலாம்.
  4. வெண்ணெய் தடவி மைதா தூவி கிரீஸ் செய்த பாத்திரத்தில் டிரை ஃப்ரூட்ஸ் தூவவும்.
  5. பின் அதன் மேல் கலவையை ஊற்றி மேலே சிறிது ட்ரை ப்ரூட்ஸ் தூவி ப்ரீ ஹீட் செய்த அவனில் 180 டிகிரி சூட்டில் 40 நிமிடம் வரை பேக் செய்யவும்.குக்கரில் செய்வதானால் இரண்டு கப் உப்பு குக்கரின்அடியில் போட்டு அதன் மேல் ஒரு ஸ்டாண்ட் வைத்து கேக் பாத்திரத்தை வைத்து 50 நிமிடம் வரை சிம்மில் வேக விடவும். கேஸ்கட் வெயிட் போடாமல் வைக்கவும்.
  6. கேக் நடுவில் ஒரு குச்சியால் குத்தவும் .ஒட்டாமல் வந்தால் கேக் வெந்து விட்டது என அர்த்தம்
  7. ஆறவிட்டு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ayesha Ziana
Mar-07-2018
Ayesha Ziana   Mar-07-2018

Wow

Pushpa Taroor
Mar-06-2018
Pushpa Taroor   Mar-06-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்