Photo of Ummu Ali by Shaima Fathima at BetterButter
261
14
0.0(3)
0

Ummu Ali

Mar-04-2018
Shaima Fathima
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Ummu Ali செய்முறை பற்றி

உம்மு ஆலி என்பது எகிப்த் நாட்டில் பிரபலமான ஒரு இனிப்பு வகை.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • பேக்கிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பால் - 1/2 லிட்டர்
  2. ப்ரட் துண்டுகள் - 10
  3. கன்டென்ஸ்டு மில்க் - 3/4 கப்
  4. சர்க்கரை - 3/4 கப்
  5. வெண்ணிலா எஸ்ஸென்ஸ்- 1/4 தேக்கரண்டி
  6. பாதாம் -1/4 கப்
  7. பிஸ்தா - பொடித்தது 1/4 கப்
  8. ஃப்ரெஷ் க்ரீம் - 250 மில்லி

வழிமுறைகள்

  1. பாதாமை நீரில் ஊறவைத்து தோல் நீக்கி சிறிதாக கட் பண்ணி எடுக்கவும்.
  2. ப்ரட் துண்டுகளின் நான்கு ஓரங்களும் கட் செய்து அகற்றி, சிறு துண்டுகளாகக்கி ஓவனில் வைக்கும் ஒரு பீங்கான் பாத்திரத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக சமமாக பரத்தி அடுக்க வேண்டும்.
  3. ஒரு பாத்திரத்தில் 1 கப் பாலுடன் கன்டென்ஸ்டு பால் 1/4 கப் ,சர்க்கரை 1/4 கப் , வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து காய்ச்சி வைக்கவும்.
  4. காய்ச்சிய பாலை மிதமான சூட்டில் அடுக்கி வைத்திருக்கும் ப்ரட்டின் மேற்பரப்பில் பரத்தி ஊற்றவும்.
  5. அடுத்து ஃப்ரஷ் க்ரீம், கன்டென்ஸ்டு பால் 1/2 கப் , சர்க்கரை 1/4கப் இவற்றை ஒன்றாக நல்ல கலந்து ப்ரட்டின் மேல் பரப்பில் ஊற்றி ஒரு கரண்டியால் தடவவும்.
  6. அதன் மீது நறுக்கி வைத்த பாதாம்,பிஸ்தா பொடியை தூவவும்.
  7. இதை ஓவனில் 8-10 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
  8. பரிமாறும் போது மீதம் இருக்கும் காய்ச்சிய பால் கலவையை ப்ரட்டில் ஊற்றி பரிமாறலாம்.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ayesha Ziana
Mar-07-2018
Ayesha Ziana   Mar-07-2018

Excellent dear.. Perfect for the contest..

Pushpa Taroor
Mar-04-2018
Pushpa Taroor   Mar-04-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்