ஓட்ஸ் இனிப்புப் பணியாரம்/ஓட்ஸ் பணியாரம்/ஓட்ஸ் ஆப்பம் | Oats Sweet Paniyaram / Oats Paniyaram / Oats Appam in Tamil

எழுதியவர் Poornima Porchelvan  |  15th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Oats Sweet Paniyaram / Oats Paniyaram / Oats Appam by Poornima Porchelvan at BetterButter
ஓட்ஸ் இனிப்புப் பணியாரம்/ஓட்ஸ் பணியாரம்/ஓட்ஸ் ஆப்பம்Poornima Porchelvan
 • ஆயத்த நேரம்

  20

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

88

0

ஓட்ஸ் இனிப்புப் பணியாரம்/ஓட்ஸ் பணியாரம்/ஓட்ஸ் ஆப்பம் recipe

ஓட்ஸ் இனிப்புப் பணியாரம்/ஓட்ஸ் பணியாரம்/ஓட்ஸ் ஆப்பம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Oats Sweet Paniyaram / Oats Paniyaram / Oats Appam in Tamil )

 • வெல்லம் - 1 கப் (பொடியாக்கப்பட்டது) / 2 கட்டி
 • உப்பு - ஒரு சிட்டிகை
 • சமையல் சோடா - ஒரு சிட்டிகை
 • தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
 • ஏலக்காய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி
 • வாழைப்பழம் - 2 நடுத்தர அளவிலானது
 • தயிர் - 2 தேக்கரண்டி
 • மைதா/அனைத்துக்கும் பயன்படுத்தும் மாவு - 2 தேக்கரண்டி (விருப்பம் சார்ந்தது)
 • கோதுமை மாவு - 1 கப்
 • அரிசி மாவு - 1/2 கப்
 • சேர்வைப்பொருள்கள்:ஓட்ஸ் - 1 கப் (குவியல்)

ஓட்ஸ் இனிப்புப் பணியாரம்/ஓட்ஸ் பணியாரம்/ஓட்ஸ் ஆப்பம் செய்வது எப்படி | How to make Oats Sweet Paniyaram / Oats Paniyaram / Oats Appam in Tamil

 1. ஒரு கடாயில், வெல்லம் தண்ணீர் கலந்து உருகும்வரை கொதிக்கவிடவும். எடுத்துவைத்து ஆறவிடவும்.
 2. ஒரு தனி பாத்திரத்தில் ஓட்ஸ், கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு, ஏலக்காய் தூள், தேங்காய் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். அடுத்து நசுக்கப்பட்ட வாழைப்பழத்தையும் தயிரையும் சேர்க்கவும். ஒரு கலக்கு கலக்கவும். வடிக்கட்டிய வெல்லப்பாகை மாவின் மீதும் வாழைப்பழக் கலவையின் மீதும் மாவு தயாரிப்பதற்காக ஊற்றவும்.
 3. தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும். குழிப்பணியாறச் சட்டியைச் சூடுபடுத்தி 1ல் இருந்து 2 தேக்கரண்டி எண்ணெய் அல்லது நெய்யை ஒவ்வொரு குழியிலும் இடவும். மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றி நடுத்திரத் தீயில் வேகவைக்கவும்.
 4. இரு பக்கமும் பொன்னிறமாகும்வரை வேகவைக்கவும். சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

உங்களிடம் குழிப்பணியாறச் சட்டி இல்லையென்றால் பொறித்து எடுக்கவும். ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி ஒரு கரண்டி மாவை எண்ணெயில் விட்டு பொன்னிறமாக மொறுமொறுப்பாகும்வரை பொறிக்கவும் (நடுத்தர தீயில் சமைக்கவும்). எண்ணெயில் இருந்து எடுத்து ஒரு டிஸ்யூ பேப்பரில் வைத்து அதிகப்படியான எண்ணெயை நீக்கவும். சூடாகப் பரிமாறவும்.

Reviews for Oats Sweet Paniyaram / Oats Paniyaram / Oats Appam in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.