வீடு / சமையல் குறிப்பு / ஓட்ஸ் இனிப்புப் பணியாரம்/ஓட்ஸ் பணியாரம்/ஓட்ஸ் ஆப்பம்

Photo of Oats Sweet Paniyaram / Oats Paniyaram / Oats Appam by Poornima Porchelvan at BetterButter
321
15
4.8(0)
0

ஓட்ஸ் இனிப்புப் பணியாரம்/ஓட்ஸ் பணியாரம்/ஓட்ஸ் ஆப்பம்

Mar-15-2016
Poornima Porchelvan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சேர்வைப்பொருள்கள்:ஓட்ஸ் - 1 கப் (குவியல்)
  2. அரிசி மாவு - 1/2 கப்
  3. கோதுமை மாவு - 1 கப்
  4. மைதா/அனைத்துக்கும் பயன்படுத்தும் மாவு - 2 தேக்கரண்டி (விருப்பம் சார்ந்தது)
  5. தயிர் - 2 தேக்கரண்டி
  6. வாழைப்பழம் - 2 நடுத்தர அளவிலானது
  7. ஏலக்காய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி
  8. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
  9. சமையல் சோடா - ஒரு சிட்டிகை
  10. உப்பு - ஒரு சிட்டிகை
  11. வெல்லம் - 1 கப் (பொடியாக்கப்பட்டது) / 2 கட்டி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில், வெல்லம் தண்ணீர் கலந்து உருகும்வரை கொதிக்கவிடவும். எடுத்துவைத்து ஆறவிடவும்.
  2. ஒரு தனி பாத்திரத்தில் ஓட்ஸ், கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு, ஏலக்காய் தூள், தேங்காய் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். அடுத்து நசுக்கப்பட்ட வாழைப்பழத்தையும் தயிரையும் சேர்க்கவும். ஒரு கலக்கு கலக்கவும். வடிக்கட்டிய வெல்லப்பாகை மாவின் மீதும் வாழைப்பழக் கலவையின் மீதும் மாவு தயாரிப்பதற்காக ஊற்றவும்.
  3. தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும். குழிப்பணியாறச் சட்டியைச் சூடுபடுத்தி 1ல் இருந்து 2 தேக்கரண்டி எண்ணெய் அல்லது நெய்யை ஒவ்வொரு குழியிலும் இடவும். மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றி நடுத்திரத் தீயில் வேகவைக்கவும்.
  4. இரு பக்கமும் பொன்னிறமாகும்வரை வேகவைக்கவும். சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்