ஓட்ஸ் வெஜிடபிள் உப்புமான/ஓட்ஸ் உப்புமா | Oats Vegetable Upma / Oats Upma in Tamil

எழுதியவர் Poornima Porchelvan  |  15th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Oats Vegetable Upma / Oats Upma by Poornima Porchelvan at BetterButter
ஓட்ஸ் வெஜிடபிள் உப்புமான/ஓட்ஸ் உப்புமாPoornima Porchelvan
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

192

0

ஓட்ஸ் வெஜிடபிள் உப்புமான/ஓட்ஸ் உப்புமா recipe

ஓட்ஸ் வெஜிடபிள் உப்புமான/ஓட்ஸ் உப்புமா தேவையான பொருட்கள் ( Ingredients to make Oats Vegetable Upma / Oats Upma in Tamil )

  • எண்ணெய் - 1 ல் இருந்து 2 தேக்கரண்டி
  • கடலைப்பருப்பு - 1தேக்கரண்டி
  • உளுத்தம்பருப்பு - 1தேக்கரண்டி
  • கடுகு - 3/4 தேக்கரண்டி
  • சுவையூட்டுவதற்கு:
  • தண்ணீர் - 1 மற்றும் 1/4 கப்
  • சுவைக்கேற்ற உப்பு
  • கொத்துமல்லி இலைகள் - அலங்கரிக்க
  • பச்சைப் பட்டாணி - 1/4 கப்
  • கேரட்டு - 1 நடுத்தர அளவிலானது (பொடியாக நறுக்கப்பட்டது)
  • இஞ்சி - 1 இன்ச் துண்டு (துருவப்பட்டது)
  • பச்சை மிளகாய் - 3 (பிளக்கப்பட்டது)
  • வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கப்பட்டது)
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • ஓட்ஸ் -1 கப்

ஓட்ஸ் வெஜிடபிள் உப்புமான/ஓட்ஸ் உப்புமா செய்வது எப்படி | How to make Oats Vegetable Upma / Oats Upma in Tamil

  1. கடாயைச் சூடுபடுத்தி ஓட்சைச் சேர்த்து பொன்னிறமாகும்வரை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அதே கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி 'சுவையூட்டுவதற்கு' கீழ் உள்ள அனைத்து சேர்வைப்பொருள்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும். பொறிய ஆரம்பித்ததும், நறுக்கப்பட்ட வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்க்கவும். வெங்காயம் பளிச்சென ஆகும்வரை வறுக்கவும்.
  3. இப்போது நன்றாக நறுக்கப்பட்ட கேரட்டு, ஊறவைத்தப் பச்சைப் பட்டாணி, உப்பு சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
  4. 1 மற்றும் 1/4 கப் தண்ணீர் மஞ்சள் தூள் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். கடாயை மூடியிட்டு மூடி வேகவைக்கவும். கேரட், பச்சைப்பட்டாணி வெந்ததும், வறுத்த ஓட்சைச் சேர்க்கவும். மீதமுள்ள தண்ணீரோடு நன்றாகக் கலக்கவும்.
  5. தண்ணீர் குறைவாக இருப்பதை உணர்ந்தால், கொஞ்சம் தண்ணீரை தெளித்து வேகவைக்கவும். கடாயை மூடி ஓட்சை நடுத்தர தீயில் தண்ணீர் உறிஞ்சப்படும்வரை விடவும்.
  6. ஓட்ஸ் மென்மையாகி ஊதியபிறகு, அடுப்பை நிறுத்தவும். கொத்துமல்லியுடன் அலங்கரித்து, தேங்காய் சட்டினியுடன் சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

நடுத்தர நறுமணத்தோடு ருசியைக் கொடுக்க எலுமிச்சை சாறைக்கூட நீங்கள் சேர்க்கலாம். அப்படிச்செய்தால் அதைக் கடைசியில் செய்யவும்.

Reviews for Oats Vegetable Upma / Oats Upma in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.