வீடு / சமையல் குறிப்பு / Paneer Whole Green Gram Paniyaram

Photo of Paneer Whole Green Gram Paniyaram by Krishnasamy Vidya Valli at BetterButter
482
6
0.0(1)
0

Paneer Whole Green Gram Paniyaram

Mar-04-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

Paneer Whole Green Gram Paniyaram செய்முறை பற்றி

பனீரையும் பச்சபயிறையும் வைத்து செய்யும் பணியாரம். ஒருவருக்கு இரண்டு வீதம் ஆறுபேர்களுக்கு கொடுக்கலாம். பச்சபயறு ஊறவைக்கும்நேரம் சேர்க்கப்படவில்லை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பச்சபயறு -1/2 கப்
  2. புழுங்கல் அரிசி - 1/8 கப்
  3. உப்பு -1/2 தேக்கரண்டி
  4. பச்ச மிளகாய் -2
  5. பெருங்காயம் -4 சிட்டிகை
  6. பனீர் மசாலாவிற்கு தேவையானவை
  7. துருவிய பனீர் 1/2 கப்
  8. வெங்காயம் தக்காளி உருளைக் கிழங்கு கேரட் -பொடியாக நறுக்கியது 1/2 கப்
  9. உப்பு, மஞ்சள் பொடி, காஷ்மீர் சில்லி பவுடர், தனியா பொடி, கரம் மசாலா, ஆம்சூர் பவுடர் - தலா 1/4 தேக்கரண்டி
  10. கஸூரி மேத்தி டிரை லீவ்ஸ் -1 தேக்கரண்டி
  11. கான்ப்ளவர் -2 தேக்கரண்டி
  12. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது
  13. தேங்காய் துருவல் -1 மேஜைக்கரண்டி
  14. தாளிக்க
  15. எண்ணெய் -1 தேக்கரண்டி
  16. சீரகம் ,கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1/4 தேக்கரண்டி
  17. கருவேப்பிலை -2 ஆரக்கு
  18. குழிப்பணியாரம் செய்ய தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பச்ச பயறு அரிசி சேர்த்து நான்கு மணிநேரம் ஊறவைக்கவும்
  2. பச்ச மிளகாய் உப்பு பெருங்காயம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி பின்னர் மற்ற காய்கள் சேர்த்து வதக்கவும்
  4. உப்பு கான்ப்ளவர் மற்றும் எல்லா பொடிகளும் கஸூரி மேத்தி டிரை லீவ்ஸ்ம் சேர்க்கவும்
  5. துருவிய பனீர் சேர்த்து கிளறவும்
  6. தேங்காய் துருவல் சேர்த்து கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும்
  7. பணியார கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த மாவு விட்டுக் கொள்ளவும்
  8. அதன்மேல் செய்து வைத்த பனீர் மசாலாவை உருண்டையாக உருட்டி வைக்கவும்
  9. மீண்டும் மேல்புறம் மாவு விடவும்
  10. ஒருபுறம் வெந்ததும் திருப்பிக்கொடுக்கவும்
  11. சட்னி அல்லது சாஸூடன் பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maanika Hoon
Mar-06-2018
Maanika Hoon   Mar-06-2018

Amazing one!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்