Photo of Fried milk by Mehala Ramakrishnan at BetterButter
723
6
0.0(3)
0

Fried milk

Mar-04-2018
Mehala Ramakrishnan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
70 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Fried milk செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் சுவையான ஸ்பானிஷ் டெசர்ட்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் 200 ml
  2. சோள மாவு 50கி
  3. வெண்ணெய் 50 கி
  4. சக்கரை அரை கப்
  5. முட்டை 1
  6. பிரெட் தூள் சிறிதளவு 4 slice பொடித்து
  7. ஏலக்காய் பொடி சிறிது
  8. பொடித்த சக்கரை சிறிது
  9. பட்டை பொடி சிறிதளவு
  10. எண்ணெய் பொறிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. 20 0ml பால், சக்கரை, சோள மாவு, வெண்ணெய் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கட்டி சேராமல் கலந்து கொண்டு அந்த கலவையை அடுப்பில் மிதமான சூட்டில் வைக்கவும்..
  2. அடி பிடிக்க விடாமல் நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.. சிறிது நேரத்தில் நன்கு ஜெல்லி பதத்தில் கலவை மாறி விடும்.
  3. இப்போது அடுப்பை நிறுத்தி விட்டு , தயாரான பால் கலவையை ஒரு கண்ணாடி தாளில் சற்று ஆறியதும் ஊற்றி ஒரு தட்டை அடியில் வைத்து நன்கு கவர் செய்து பிரிட்ஜ் இல் குறைந்தது 1 மணி நேரம் வைக்கவும்.
  4. ஒரு மணி நேரம் கழித்து, பிரிட்ஜ் இல் இருந்து எடுத்து பால் கலவையை பனீர் துண்டுகள் போல கட் பண்ணவேண்டும்
  5. இப்போது ஒரு கிண்ணத்தில் முட்டையை அடித்து தயாராக இருக்க வேண்டும்
  6. பிரெட் தூளை ஒரு தட்டில் பரப்பி வைத்து கொள்ள வேண்டும்
  7. பின்னர் வெட்டிய துண்டுகளை முட்டையில் நனைத்து, பிரெட் தூளில் பிரட்டி தயாராக வைத்து கொள்ள வேண்டும்
  8. இப்போது கடாயில் பொரிக்க தேவையான எண்ணையை ஊற்றி, குறைந்த தீயில் வைத்துக்கொண்டு தயார் செய்து வைத்த துண்டுகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  9. பொன்னிறமாக மாறியதும் பால் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.
  10. இதனுடன் பொடித்த சக்கரை மற்றும் பட்டை பொடியை லேசாக தூவினால் சுவையான Friedமில்க் ரெடி.

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ayesha Ziana
Mar-07-2018
Ayesha Ziana   Mar-07-2018

Innovative rcp.. Superb

Maanika Hoon
Mar-06-2018
Maanika Hoon   Mar-06-2018

Brilliant recipe

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்