Photo of Palm Jaggery Palkova by kokila nalliyannan at BetterButter
940
8
0.0(1)
0

Palm Jaggery Palkova

Mar-04-2018
kokila nalliyannan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Palm Jaggery Palkova செய்முறை பற்றி

இன்றைய சூழலில் அனைத்து இனிப்பு உணவுகளும் சர்க்கரை கொண்டு தான் செய்ய படுகிறது. இதை மாற்றும் வகையில் பாரம்பரிய முறைப்படி கருப்பட்டி சேர்த்து செய்யப்பட்டது இந்த கருப்பட்டி பால்கோவா. இந்த இனிப்பை அனைவரும் உண்டு மகிழலாம். இதன் சுவை உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். இந்த பதிவு கண்டிப்பாக அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன் ஏனேன்றால் கருப்பட்டி அல்லது வெல்லம் சர்க்கரைக்கு மாற்றாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கருப்பட்டி 1/4 கப்
  2. பால் 1/2 லிட்டர்
  3. தண்ணீர் 1/4 கப்

வழிமுறைகள்

  1. கருப்பட்டியை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  2. கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி கொள்ளவும்.
  3. வடிகட்டிய கருப்பட்டியை மீண்டும் தண்ணீர் வற்றும் வரை காய்ச்சவும். இது ஆறியதும் பேஸ்ட் போன்று ஆகிவிடும்.
  4. அடுத்து 1/2 பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி சுண்ட காய வைக்கவும்.
  5. இதை கைவிடாமல் கிளறவும்.
  6. பால் முக்கால் வாசி வற்றியதும் கருப்பட்டி பேஸ்டை (சுவைக்கு ஏற்ப) சேர்க்கவும்
  7. இதை நன்றாக கிளறவும்
  8. பால் வற்றி கிழே காண்பித்த பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்
  9. சுவை மற்றும் ஆரோக்கியமான கருப்பட்டி பால்கோவா தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maanika Hoon
Mar-06-2018
Maanika Hoon   Mar-06-2018

Nice Jaggery dish

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்