பால் போளி | Milk boli in Tamil

எழுதியவர் T.n. Lalitha  |  5th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Milk boli recipe in Tamil,பால் போளி, T.n. Lalitha
பால் போளிT.n. Lalitha
 • ஆயத்த நேரம்

  60

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  40

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  8

  மக்கள்

8

0

பால் போளி recipe

பால் போளி தேவையான பொருட்கள் ( Ingredients to make Milk boli in Tamil )

 • பால் - 1.5 லிட்டர்
 • சர்க்கரை - 2 மேஜைக்கரண்ட
 • மைதா - 2 குவளைகள்
 • கார்ன் மாவு - 1/2 குவளை
 • பால் (மாவு பிசைய) - 2 மேஜைக்கரண்டி
 • தண்ணீர் - தேவையான அளவு
 • உப்பு - சிறிதளவு
 • பாதாம் - 2/3
 • நெய் - 1 தேக்கரண்டி

பால் போளி செய்வது எப்படி | How to make Milk boli in Tamil

 1. ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், மைதாமாவு, உப்பு மூன்றையும் போட்டு அதனுடன் தண்ணீர் ஊற்றிப் பிசைந்து, நெய் விட்டு கலந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
 2. பாலை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும்.
 3. பால் பாதியாக சுண்டியதும் அதில், ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை, பொடித்த பாதாம் , குங்குமப்பூவை கலந்து இறக்கி தனியாக வைக்கவும்
 4. பிசைந்த மைதாமாவை சிறிய அப்பளங்களாக இட்டு, கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் எல்லா போளிகளையும் பொரித்து எடுக்கவும்.
 5. பொரித்த போளிகளை சுண்ட காய்ச்சிய பால் கலவையை மேலே ஊற்றி ஊற விட்டு பரிமாறவும். சுவையான பால் போளி ரெடி.

எனது டிப்:

பாதாம் மற்றம் குங்கப்பூவை சிறிது பால் விட்டு அரைத்து சுண்டிய பாலில் சேர்க்கலாம்.

Reviews for Milk boli in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.