வீடு / சமையல் குறிப்பு / வெள்ளரி பச்சடி

Photo of Cucumber pachadi / Vellari pachadi by Asiya Omar at BetterButter
813
7
0.0(0)
0

வெள்ளரி பச்சடி

Mar-05-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெள்ளரி பச்சடி செய்முறை பற்றி

தேங்காய்,தயிர் எல்லாம் சேர்த்து செய்வதால் செம ருசி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கேரளா
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளரிப் பிஞ்சு-6
  2. நறுக்கிய பெரிய வெங்காயம்-1
  3. கீரிய பச்சை மிளகாய் -3
  4. கருவேப்பிலை-2 இணுக்கு
  5. உப்பு - தேவைக்கு
  6. அரைக்க:-
  7. தேங்காய்த்துருவல்-3 மேஜைக்கரண்டி
  8. கெட்டி தயிர் -அரை கப்
  9. தாளிக்க:-
  10. தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
  11. கடுகு,உ.பருப்பு - 1/2 தேக்கரண்டி
  12. மிளகாய் வற்றல்-1
  13. நறுக்கிய வெங்காயம்,கருவேப்பிலை - சிறிது.

வழிமுறைகள்

  1. வெள்ளரி பிஞ்சை தோல் சீவி நீளமாக துண்டு செய்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெள்ளரி, வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,சிறிது தண்ணீர் உப்பு கலந்து வேக வைக்கவும்.
  3. தேங்காய் 3 மேஜைக்கரண்டி அரை கப் தயிர் சேர்த்து அரைக்கவும்.
  4. வெந்த பின்பு அடுப்பை அணைத்து சிறிது ஆறியவுடன் அரைத்த விழுதை சேர்த்து கலந்து விட்டு அடுப்பில் சிறிது வைக்கவும்.
  5. சூடு படுத்தவும்.திரியக் கூடாது. தாளிக்க தேங்காய் எண்ணெய் சூடு செய்து கடுகு,உ.பருப்பு,மிளகாய் வற்றல்,நறுக்கிய வெங்காயம்,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.
  6. சுவையான வெள்ளரிக்காய் பச்சடி தயார்.
  7. நெய்ச்சோறு,புலாவ்,பிரியாணி,ப்லைன் ரைஸ் உடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்