Photo of Rasmalai by T.n. Lalitha at BetterButter
512
8
0.0(0)
0

ரஸமலாய்

Mar-05-2018
T.n. Lalitha
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
135 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ரஸமலாய் செய்முறை பற்றி

ரசமலாய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • மேற்கு வங்காளம்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பால் – 1 லிட்டர்
  2. சர்க்கரை - 250 கிராம்
  3. ஏலக்காய் - 4
  4. குங்குமப் பூ - அரை கிராம்
  5. பிஸ்தா, பாதாம், முந்திரி - 2

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் முக்கால் லிட்டர் பாலை ஊற்றி சுண்ட காய்ச்சவும். அதில் லெமன் சாற்றை சேர்த்து பாலை திரிய விடவும். பால் திரிந்ததும் இறக்கி வைத்து ஒரு மஸ்லின்துணியில் போட்டு தண்ணீரை முழுவதுமாக வடித்து விடவும்
  2. 2 மணிநேரம் கழித்து தண்ணீர் வடிந்த பின்னர் பனீரை எடுத்துக் கொள்ளவும். ரசமலாய் செய்ய பனீர் தயார். இந்த பனீரை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வேண்டிய வடிவங்களில் தட்டி வைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் கால் லிட்டர் பாலை ஊற்றி காய்ச்சவும். அதில் ஏலக்காய் பொடி, குங்குமப் பூ, சர்க்கரை, பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தாவை சேர்த்து கலக்கவும்.
  4. மிதமான தீயில் காய்ச்சவும். பால் நன்கு காய்ந்ததும் அதில் தயார் செய்து வைத்திருக்கும் பனீர் உருண்டைகளை போட்டு மூடி விடவும். 10 நிமிடம் கழித்து திறந்து மெதுவாக உடைந்து போகாமல் கிளறவும். இப்போது சுவையான ரசமலாய் ரெடி. பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.   ரசமலாயை தனியாக கிண்ணத்தில் போட்டு ஃப்ரிட்ஜ்சில் வைத்து ஜில் என்றும் சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்