Photo of Homemade ghee by Rabia Hamnah at BetterButter
685
7
0.0(2)
0

Homemade ghee

Mar-05-2018
Rabia Hamnah
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Homemade ghee செய்முறை பற்றி

வீட்டில் தயாரிக்கும் நெய் என்பதால் சுவையும் ஆரோக்கியமும் உள்ளது.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாலாடை - 1 1/2 ஜாம் பாட்டில் அளவு
  2. உரை தயிர்- 2 டேபிள் ஸ்பூன்
  3. ஐஸ் கட்டி -7-8

வழிமுறைகள்

  1. பசும் பாலை இரவு நன்றாக காய்ச்சி ஆற வைத்து பின்பு ஃபிரிட்ஜில் வைக்கவும்.
  2. மறு நாள் காலையில் பாலாடை மேலே படிந்திருக்கும்.
  3. அந்த பாலாடையை மட்டும் எடுத்து பாட்டிலில் சேர்க்கவும்.
  4. அந்த பாட்டிலில் 2 டேபிள் ஸ்பூன் உரை தயிர் முதல் நாள் மட்டும் சேர்க்கவும். தினமும் சேர்க்க வேண்டாம்.
  5. இப்படி எல்லா நாளும் சேர்க்கவும். தினமும் பாலாடை சேர்த்து ஃப்ரீசரில் வைக்கவும்.
  6. ஓரளவு சேர்ந்ததும் பாட்டிலை எடுத்து வெளியே வைக்கவும்.
  7. அறை நிலை வெப்பத்திற்கு வந்தவுடன் அதை மிக்ஸி கப்பில் இட்டு ஐஸ் கட்டி சேர்த்து விட்டு விட்டு அடிக்கவும்.
  8. வெண்ணெய் தனியாக திரண்டு பந்து போன்று வரும் அதை எடுத்து தண்ணீர் சேர்த்து கழுவி எடுக்கவும்.
  9. பின்பு பாத்திரத்தை சூடாக்கி வெண்ணெயை சேர்க்கவும்.
  10. வெண்ணெய் உருகியதும் நெய் மனம் வரும் பொழுது ஒரு கொத்து முருங்கை இலை சேர்த்து விடவும்.
  11. முருங்கை இலை பொரிந்ததும் சத்தம் அடங்கியதும் கண்ணாடி பாட்டிலில் வடிகட்டி வைக்கவும்.
  12. இரண்டு மூன்று நாட்களில் அழகான முறையில் உரைந்து இருக்கும்.
  13. தேவைபடும் பொழுது உருக்கி சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
  14. எல்லாவற்றிற்கும் பயன்படுத்த ஏற்றது.
  15. சுத்தமான ஆரோக்கியமான நெய் தயார்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ayesha Ziana
Mar-07-2018
Ayesha Ziana   Mar-07-2018

Perfect dear

Preeti Gurung
Mar-06-2018
Preeti Gurung   Mar-06-2018

Ghee looks amazing :)

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்