வீடு / சமையல் குறிப்பு / பாட்டியின் பூண்டு ஊறுகாய்

Photo of Grandma's Garlic Pickle by Jofy Abraham at BetterButter
9137
388
4.6(0)
0

பாட்டியின் பூண்டு ஊறுகாய்

Mar-16-2016
Jofy Abraham
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 250 கிராம் பூண்டு தோலுரிக்கப்பட்டது
  2. 100 கிராம் புளி
  3. 60 மிலி நல்லெண்ணெய்
  4. 3 தேக்கரண்டி மிளகாய்த்தூள் (அல்லது உங்கள் சுவைக்கேற்றபடி அதிகமாக)
  5. ஒரு சிட்டினை பெருங்காயம்
  6. 1 தேக்கரண்டி கடுகு
  7. தேவையான அளவு தண்ணீர்
  8. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. கடாயை 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடுபடுத்திக்கொள்க. பூண்டு சேர்க்கவும். அவை பொன்னிறமாகும்வரை வறுத்துக்கொள்ளவும். ஒரு தட்டில் எடுத்து ஆறவிடுக.
  2. வறுத்து பூண்டில் பாதியை எடுத்து கரடுமுரடான சாந்தாக அரைத்துக்கொள்ளயும். பிளண்டர் ஒருமுறை கலக்கினால் போதுமானது.
  3. புளியில் 1/2 கப் தண்ணீர் சேர்த்து அடர்த்தியான புளிக்கரைசலை செய்துகொள்க.
  4. அதே கடாயை 50 மிலி எண்ணெய் சேர்த்து சூடுபடுத்திக்கொள்ளவும். கடுகு சேர்க்கவும். அவை பொறிய ஆரம்பித்தமு, ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்க்கவும். புளிக் கரைசலைச் சேர்த்து எண்ணெய் பிரியும்வரை நடுத்தரத் தீயில் கொதிக்கவிடவும்.
  5. இப்போது வறுத்த பூண்டு + வறுத்த பூண்டு சாந்தை கடாயில் கொதிக்கம் புளித் தண்ணீரில் சேர்க்கவும். நன்றாகக் காலக்கவும். சிவப்பு மிளகாய்த் தூளையும் தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
  6. கலவையை ஒரு நடுத்தரத் தீயில் 15 நிமிடங்களுக்கு இடையிடையே கலக்கிக்கொண்டே கொதிக்கவிடவும்.
  7. கொதித்ததும், அடுப்பை நிறுத்திவிட்டு ஊறுகாயை ஆறவிடுக. காற்றுப்புகாத ஒரு பாத்திரத்திற்கு மாற்றுக. தயிர் சாதத்தோடு பரிமாறவும், சொர்க்கமாக இருக்கும்:)
  8. தயிர் சாதத்தோடு பரிமாறவும், சொர்க்கமாக இருக்கும்:)

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்