வீடு / சமையல் குறிப்பு / ரவை மோர்கூழ்

Photo of Sooji morkuzh by Krishnasamy Vidya Valli at BetterButter
337
6
0.0(0)
0

ரவை மோர்கூழ்

Mar-05-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ரவை மோர்கூழ் செய்முறை பற்றி

இது ஒரு எளிமையான உப்புமா வெரைட்டி. மிகவும் பழமையான தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு. அதை அரிசி மாவில் செய்வார்கள். ஆனால் நான் வித்யாசமாக ரவையில் செய்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை-1 கப்
  2. கடைந்த மோர் -2 கப்
  3. உப்பு-1 தேக்கரண்டி (தேவைப்பட்டால் மோர்மிளகாயோட உப்பின் அளவை பொருத்து மாற்றிக்கொள்ளவும்)
  4. தாளிக்க
  5. எண்ணெய், நெய் -தலா 2 தேக்கரண்டி
  6. கடுகு -1 தேக்கரண்டி
  7. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  8. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  9. மோர்மிளாய் வத்தல் -4
  10. பெருங்காயம் -4 சிட்டிகை

வழிமுறைகள்

  1. ரவையை மோரில் உப்பு சேர்த்து கெட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும். அப்படியே ஐந்து நிமிடங்கள் வைக்கவும்.
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்
  3. கரைத்து வைத்ததை சேர்த்து கெட்டி தட்டாமல் கைவிடாமல் கிளறவும்.
  4. ரவை நன்றாக வெந்து செமிசாலிட் பதம் இருக்கும்போது அடுப்பை அணைத்து விடவும். சூடாக பறிமாறவும். மோர்மிளகாய் தான் இதன் சுவைக்கு காரணம். எனவே வீட்டில் தயாரிக்கப்பட்ட மோர்மிளகாய் வத்தல் என்றால் சுவை அதிகம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்