வீடு / சமையல் குறிப்பு / முளைகட்டிய பச்சைபயறு மோர்க்குழம்பு

Photo of Sprouted green gram morkuzhambu by Sowmya Sundar at BetterButter
327
6
0.0(0)
0

முளைகட்டிய பச்சைபயறு மோர்க்குழம்பு

Mar-06-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முளைகட்டிய பச்சைபயறு மோர்க்குழம்பு செய்முறை பற்றி

முளைகட்டிய பயிறை வறுத்து அரைத்த மோர்க்குழம்பில் சேர்த்து செய்யும் டிஷ் இது.முளைகட்டிய நேரம் சேர்க்கப்படவில்லை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முளைகட்டிய பச்சை பயறு -1/2 கப்
  2. திக்கான கடைந்த மோர் -2 கப்
  3. தக்காளி-1
  4. கடுகு -1 டீஸ்பூன்
  5. வெந்தயம்-1/2 டீஸ்பூன்
  6. பெருங்காயம் -1/2 டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள்- 1 டீஸ்பூன்
  8. கறிவேப்பிலை சிறிது
  9. வறுத்து அரைக்க
  10. துவரம் பருப்பு- 2 டீ ஸ்பூன்
  11. உளுத்தம்பருப்பு-2 டீஸ்பூன்
  12. சீரகம்- 1 டீஸ்பூன்
  13. மல்லி - 1டீஸ்பூன்
  14. வெந்தயம் -1/2 டீ ஸ்பூன்
  15. மிளகாய் வற்றல்-5
  16. தேங்காய் துருவல்-1/4 கப்

வழிமுறைகள்

  1. பச்சை பயறை குக்கரில் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரை வேக விட்டு எடுக்கவும்
  2. கடாயில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
  3. பின்னர் அதை மோர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும்
  4. அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் கறிவேப்பிலை தாளித்து தக்காளி மற்றும் பச்சை பயறு சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள் ,பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. பின அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் கடைந்த மோர் சேர்த்து பொங்கி வந்ததும் இறக்கவும். உப்பு சேர்த்து கொள்ளவும்.கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்