வீடு / சமையல் குறிப்பு / கோதுமை ரவை டோக்ளா

Photo of Wheat rava dhokla by Asiya Omar at BetterButter
451
6
0.0(0)
0

கோதுமை ரவை டோக்ளா

Mar-06-2018
Asiya Omar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை ரவை டோக்ளா செய்முறை பற்றி

ஸ்நாக்ஸ் டிபனுக்கு செய்ய ஆரோக்கியமான ருசியான குறிப்பு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பிரெஷர் குக்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உடைத்த கோதுமை ரவை -1 கப்
  2. தயிர் -1 கப்
  3. உப்பு - சுவைக்கு
  4. சோடா உப்பு -1/4 தேக்கரண்டி
  5. சீரகம்,மஞ்சள் தூள்,பெருங்காயம் - தலா 1/4 தேக்கரண்டி
  6. நறுக்கிய கொத்தமல்லி,கருவேப்பிலை-2 மேஜைக்கரண்டி
  7. எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
  8. அரைக்க:-
  9. பச்சை மிளகாய் -2
  10. நறுக்கிய இஞ்சி -1 மேஜைக்கரண்டி
  11. அலங்கரிக்க:-
  12. துருவிய கேரட்,தேங்காய்த்துருவல்
  13. நறுக்கிய மல்லி இலை
  14. தாளிக்க:-
  15. கடுகு-1/2 தேக்கரண்டி ,எண்ணெய் -1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கோதுமை ரவை வறுத்துக் கொள்ளவும்.
  2. பின்பு அலசி வைக்கவும்.தண்ணீர் வடித்து எடுக்கவும்.
  3. பச்சை மிளகாய் இஞ்சி அரைத்து எடுக்கவும்.
  4. ஒரு பாத்திரத்தில் ஊறிய கோதுமை ரவை நறுக்கிய மல்லி,கறிவேப்பிலை, அரைத்த விழுது,தயிர் சோடா உப்பு, சீரகத்தூள்,பெருங்காயம் சேர்க்கவும்.
  5. நன்கு கலந்து விடவும். ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  6. பின்பு ஒரு பாத்திரத்தில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதில் ஊறிய கலவை சேர்க்கவும்.
  7. குக்கரில் தட்டு போட்டு 10-15 நிமிடம் மூடி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
  8. கோதுமை ரவை டோக்ளா தயார்.அலங்கரித்து பரிமாறவும்.
  9. சுவையும் சத்தும் மிக்கது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்