Photo of Spicy paneer by pavumidha arif at BetterButter
415
14
0.0(1)
0

Spicy paneer

Mar-06-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Spicy paneer செய்முறை பற்றி

பன்னீர் சம்பந்தப்பட்ட உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பன்னீர் துண்டுகள் 1/2 கப்
  2. மல்லி விதை 2 டீஸ்பூன்
  3. காய்ந்த மிளகாய் 3
  4. வெங்காயம் 1 மற்றும் அரை
  5. தக்காளி 1
  6. பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  7. கரம் மசாலா 2 டீஸ்பூன்
  8. இஞ்சி விழுது 1/2 டீஸ்பூன்
  9. உப்பு
  10. எண்ணெய் அல்லது நெய்
  11. மல்லித்தழை ‌சிறிது

வழிமுறைகள்

  1. கடாயில் மல்லி விதை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்கவும்.
  2. பிறகு அதனை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  3. 1/2 வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.
  4. கடாயில் எண்ணெய் மற்றும் சிறிது நெய் விட்டு வெங்காயத்தை வதக்கவும்.
  5. பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி மற்றும் பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
  6. இப்பொழுது அரைத்த தக்காளி விழுது மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் ‌
  7. 5 நிமிடம் ‌கழித்து அரைத்த மல்லி விதை மற்றும் ‌காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும் ‌
  8. பன்னீர் துண்டுகளை 5 நிமிடம் ‌தண்ணீரில்‌ போட்டு எடுக்கவும்.
  9. பிறகு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.இதில் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறவும்.
  10. இப்பொழுது பன்னீர் சேர்த்து 7-10 நிமிடம் குறைந்த தீயில் சமைத்து இறக்கவும்.
  11. சுவையான கடாய் பன்னீர் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
fithara
Mar-07-2018
fithara   Mar-07-2018

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்