Photo of Ghee carrot Halwa by Radha Venkatesh at BetterButter
574
7
0.0(1)
0

Ghee carrot Halwa

Mar-06-2018
Radha Venkatesh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Ghee carrot Halwa செய்முறை பற்றி

செய்முறை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் - 1/2 லிட்டர்
  2. நெய் -5 மேஜைக்கரண்டி
  3. கேரட் துருவியது -1/2 கிலோ
  4. சர்க்கரை -1/4 கிலோ
  5. குங்குமப்பூ - பின்ச்
  6. பாதாம்பருப்பு - 15
  7. முந்திரிபருப்பு - 15
  8. ஏலக்காய் -5

வழிமுறைகள்

  1. தேவையானபொருட்களைஎடுத்துவைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் பாதம் & முந்திரிபருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
  3. அதே கடாயில் 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி துருவிய கேரட் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.
  4. நன்கு வதங்கியதும் 1/2 லிட்டர் பால் சேர்த்து இடை இடையே நன்றாக கிளறவும்.
  5. தனியாக மிக்சியில் 2 தேக்கரண்டி சர்க்கரை & ஏலக்காய் விதைகளை மட்டும் எடுத்து பொடித்து வைக்கவும்.
  6. குங்குமப்பூ சேர்த்து நன்கு கிளறவும்.
  7. பால் நன்றாக வற்றியதும் சர்க்கரை & பொடித்து வைத்துள்ள ஏலக்காய் சர்க்கரையை சேர்த்து கிளறவும்.
  8. சர்க்கரையில் உள்ள நீர் வற்றி சுருண்டு அல்வா பதம் வரும் பொழுது மீதமுள்ள நெய் சேர்த்து நன்கு கிளறவும்.
  9. அல்வா பதம் வந்ததும் பாதாம் பருப்பு & முந்திரிபருப்பு பொடித்து சேர்த்து கிளறவும்.
  10. சுவையான நெய் கேரட் அல்வா தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Venkatesh Gopalan
Mar-06-2018
Venkatesh Gopalan   Mar-06-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்