வீடு / சமையல் குறிப்பு / Ledi Kenny(Bengali Version Of Gulab Jamun)

Photo of Ledi Kenny(Bengali Version Of Gulab Jamun) by Menaga Sathia at BetterButter
510
5
0.0(1)
0

Ledi Kenny(Bengali Version Of Gulab Jamun)

Mar-06-2018
Menaga Sathia
80 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Ledi Kenny(Bengali Version Of Gulab Jamun) செய்முறை பற்றி

பனீரில் செய்யபடும் இந்த குலோப் ஜாமூன் மேற்கு வங்களாத்தில் மிக பிரபலம்.சுவையாகவும் இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • மேற்கு வங்காளம்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பனீர் -1 கப்
  2. பாம்பே ரவை -1/4 கப்
  3. சர்க்கரை -1/4 கப்+1/8 கப்
  4. நெய் - 1/2 டீஸ்பூன்
  5. ஏலக்காய்தூள் -1/8 டீஸ்பூன்
  6. திராட்சை -15
  7. நெய்/எண்ணெய் - பொரிக்க
  8. சர்க்கரை - ஜாமூனில் பிரட்டுவதற்கு
  9. சர்க்கரை பாகு செய்ய:
  10. சர்க்கரை - 1 கப்
  11. நீர் -1/2 கப்
  12. ஏலக்காய்தூள் -1/8 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு தட்டில் பனீர்,ரவை,சர்க்கரை,நெய் இவற்றை சேர்த்து உள்ளங்கையால் நன்கு மிருதுவாக பிசையவும்.
  2. கையில் பிசுபிசுப்பு பதம் காணும்போது ஏலக்காய்தூள் சேர்த்து பிசைந்து 15 சம உருண்டைகளக உருட்டவும்.
  3. உருண்டையில் ஒரு திராட்சையினை வைத்து ஸ்டப்டு செய்தபின் மீண்டும் உருண்டைகளாகவோ அல்லது நீளமாகவோ உருட்டி வைக்கவும்.
  4. பாத்திரத்தில் சர்க்கரை,நீர் சேர்த்து 1 கம்பிபதம் வரை வைத்து ஏலக்காய்தூள் சேர்த்து இறக்கவும்.
  5. இப்பொழுது எண்ணெய் காயவைத்து உருண்டைகளை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
  6. பொரித்த உருண்டைகளை ஜாமுனில் 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
  7. ஊறிய ஜாமுன்களை எடுத்து மீண்டும் சர்க்கரையில் பிரட்டி பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ayesha Ziana
Mar-07-2018
Ayesha Ziana   Mar-07-2018

Superb

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்