Photo of Whipped potato (kfc style) by Nur Aishah Vimala at BetterButter
480
6
0.0(2)
0

Whipped potato (kfc style)

Mar-07-2018
Nur Aishah Vimala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Whipped potato (kfc style) செய்முறை பற்றி

மசித்த உருளைக்கிழங்கின் மேல் சுவையான குழம்பு ஊற்றி அனைவரும் விரும்பி உண்ணும் அமேரிக்க உணவு.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • அமெரிக்கன்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு 2
  2. வெண்ணெய் 1 தே. கரண்டி
  3. உப்பு சிட்டிகை
  4. பால் 1/2 கப்
  5. குழம்புக்கு :-
  6. பெ. வெங்காயம் 1
  7. பூண்டு 2 பற்கள்
  8. வெண்ணெய் 1 மே. கரண்டி
  9. மைதா மாவு 2 மே. கரண்டி
  10. சிக்கன் க்யூப் 1
  11. வெள்ளை மிளகுத்தூள் தே. அளவு
  12. உடைத்த கருப்பு மிளகு
  13. தண்ணீர் 2 கப்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை தோலுரித்து சிறியதாக நறுக்கி கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைக்கவும்
  2. வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி வெண்ணெய், மிளகுத்தூள் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து நன்றாக மசிக்கவும்.
  3. குழம்புக்கு வெண்ணெயில் பூண்டு வெங்காயம் போட்டு வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கி கொஞ்சம் கேரமலாக வந்ததும் மைதா மாவை போட்டு கிளறவும்.
  5. மாவு வர்ணம் சாக்லெட்டாக மாறியதும் தண்ணீர் சேர்த்து கிளறி சிக்கன் க்யூப், இரு வகை மிளகு சேர்த்து கொதிக்க விடவும்.
  6. அடி பிடிக்காமல் கிளறி கொண்டே இருக்கவும்.மிகவும் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
  7. கடைசியாக ப்லென்டரில் போட்டு லேசாக அடித்துக்கொள்ளவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Mar-07-2018
Pushpa Taroor   Mar-07-2018

Good

Mohammed Abduallah
Mar-07-2018
Mohammed Abduallah   Mar-07-2018

Wow

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்