Photo of Paneer Sweet Sugiyan by Sowmya Sundar at BetterButter
373
7
0.0(1)
0

Paneer Sweet Sugiyan

Mar-07-2018
Sowmya Sundar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Paneer Sweet Sugiyan செய்முறை பற்றி

பனீர் வெல்ல பூரணம் உளுந்து மாவில் தோய்த்து பொரிக்கும் டிஷ்.கேரளாவில் பச்சை பயறு வைத்த சுகியன் மைதாமாவில் தோய்த்து செய்வார்கள். நான் புதுமையாக பனீரை பூரணம் வைத்து உளுந்து மாவில் தோய்த்து செய்தேன். சுவை அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள்!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பனீர் - 1 கப்
  2. வெல்லம்- 3/4 கப்
  3. தேங்காய் துருவல்-2 டேபிள் ஸ்பூன்
  4. நெய் -2 டேபிள் ஸ்பூன்
  5. உளுந்து -1/4 கப்
  6. கடலை பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்
  7. அரிசி -2 டேபிள் ஸ்பூன்
  8. ஏலக்காய் பொடி-1/2 டீஸ்பூன்
  9. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. முழு உளுந்தை களைந்து விட்டு தண்ணீர் விட்டு கடலை பருப்பு, அரிசி சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் அதை வடித்து விட்டு மிக்ஸியில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து நைசாக அதே சமயம் கெட்டியாக அரைத்து கொள்ளவும்
  3. கடாயில் நெய் விட்டு வெல்லம் ,ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் பனீர் ,தேங்காய் துருவல் ,ஏலக்காய் பொடி சேர்த்து சுருள கிளறவும்
  4. ஆறியதும் உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டையாக உளுந்து மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போடவும்
  6. மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  7. சுவையான பனீர் சுகியன் தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Mar-07-2018
Pushpa Taroor   Mar-07-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்