வீடு / சமையல் குறிப்பு / மாவா(கோவா) கேக்

Photo of Mawa(kova) cake by saranya sathish at BetterButter
1072
5
0.0(0)
0

மாவா(கோவா) கேக்

Mar-07-2018
saranya sathish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மாவா(கோவா) கேக் செய்முறை பற்றி

இனிப்பு இல்லாத கோவா பயன்படுத்தி செய்த கேக்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா - 1 1/4 கப்
  2. பால் - 6 டேபிள் ஸ்பூன்
  3. மாவா(கோவா) - 100 கிராம்
  4. வெண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன்
  5. பேகிங் பவுடர் - 1/2 ஸ்பூன்
  6. வெண்ணிலா எசன்ஸ் - 1 ஸ்பூன்
  7. பொடித்த சக்கரை - 1 கப்
  8. முட்டை- 2
  9. உப்பு - 1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஓவனை 180° இல் 10 நிமிடம் சூடு செய்யவும்.
  2. ஒரு அகலமான பத்திரத்தில் மைதா,பேகிங் பவுடர், பொடித்த சர்க்கரை சேர்த்து  சலித்து கொள்ளவும்.
  3. பிறகு அதில் வெண்ணெய், உதிர்த்த மாவா, வெண்ணிலா எசென்ஸ், முட்டை சேர்த்து நன்றாக பீட் செய்யவும்.
  4. பின் பால் சேர்த்து கலந்து மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும்.
  5. மாவு கட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து கொள்ளவும்.
  6. பின் கேக் செய்யும் அலுமினிய பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எல்லா இடங்களுக்கும் தடவவும். அதன் மேலே கொஞ்சம் மைதா மாவை தூவவும்.
  7. கேக் கலவையை அந்த பாத்திரத்தில் ஊற்றி 30 நிமிடம் பேக் செய்யவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்