வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் புருட் நட் போளி

Photo of Panner dry fruit and nut poli by saranya sathish at BetterButter
516
4
0.0(0)
0

பன்னீர் புருட் நட் போளி

Mar-07-2018
saranya sathish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் புருட் நட் போளி செய்முறை பற்றி

பன்னீர், முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட், திராட்சை சேர்த்து செய்த போளி.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா மாவு - 1/2 கப்
  2. சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
  3. ரவை - 1/2 கப்
  4. பன்னீர் - 100 கிராம்
  5. நல்லெண்ணெய் - 1 கப்
  6. முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட் - 1/2 கப்
  7. காய்ந்த திராட்சை - 1/4 கப்
  8. ஏலக்காய்த்தூள் - சிறிது
  9. தண்ணீர் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவும் பதத்திற்கு பிசைந்து சிறிது நல்லெண்ணெய் சேர்த்து 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
  2. மிக்ஸியில் அனைத்து பருப்பு மற்றும் திராட்சை ஏலக்காய் தூள் சர்க்கரை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  3. அரைத்து விழுதுடன் உதிர்ந்த பன்னீர் சேர்த்து கலந்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.
  4. வாழை இலையில் எண்ணெய் தடவி சிறிதளவு மைதா மாவு கலவையை எடுத்து வைத்து கைகளால் அழுத்தி சப்பாத்தி போல் பரப்பி விடவும். அதன் மேல் உருண்டையை வைத்து மூடவும்.
  5. பிறகு அதை சப்பாத்தி போல் தட்டவும்.
  6. பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து போளியை சேர்த்து சிறிது எண்ணேய் விட்டு இரண்டு புறமும் நன்றாக சுட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்