வீடு / சமையல் குறிப்பு / சீஸ் ஸ்டப்டு பூரி

Photo of Cheese stuffed poori by Krishnasamy Vidya Valli at BetterButter
500
5
0.0(0)
0

சீஸ் ஸ்டப்டு பூரி

Mar-07-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சீஸ் ஸ்டப்டு பூரி செய்முறை பற்றி

குழந்தைகள் மிகவும் விரும்பும் உணவு பூரி. அதில் சீஸ் ஸ்டப் செய்து கொடுத்தால் இன்னும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. துருவிய சீஸ் -1/4 கப்
  2. வெங்காயம் -1
  3. உருளைக் கிழங்கு -1
  4. உப்பு -1/4 தேக்கரண்டி
  5. காரப்பொடி -1/4 தேக்கரண்டி
  6. பெருங்காயம் -2 சிட்டிகை
  7. கரம் மசாலா -4 சிட்டிகை
  8. தனியா பொடி -4 சிட்டிகை
  9. மஞ்சள் பொடி -4 சிட்டிகை
  10. தாளிக்க
  11. எண்ணெய் -1/4 தேக்கரண்டி
  12. சீரகம் -2 சிட்டிகை
  13. பூரிக்கு தேவையானவை
  14. கோதுமை மாவு -1/4 கப்
  15. ரவை -2 தேக்கரண்டி
  16. உப்பு -1/4 தேக்கரண்டி
  17. பூரியை ஷாலோபிரை/டீப்பிரை செய்வதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக்கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பச்ச வாசனை போனவுடன் உருளைக் கிழங்கு சேர்த்து வதக்கவும்
  4. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்க்கவும்
  5. நன்றாக வதங்கியதும் தனியாக எடுத்து வைக்கவும்
  6. பூரிக்கு கொடுக்கப்பட பொருட்களை சேர்த்து பிசைந்து பூரி இட்டுக்கொள்ளவும்
  7. அதன் மேல் ஒருபுறத்தில் செய்து வைத்த மசாலாவை வைத்து துருவிய சீஸை மேலே தூவிக்கொள்ளவும்
  8. மறுபுறம் மடித்து தண்ணீர் தொட்டு ஒட்டிக்கொள்ளவும்
  9. எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து (டீப் பிரை/ஷாலோபிரை) எடுக்கவும்
  10. தொட்டுக் கொள்ள ஏதும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்