வீடு / சமையல் குறிப்பு / ஏத்தம்பழ பால் பாயசம்(பிரதமன்)

Photo of Ethampazha milk payasam (pirathaman) by Krishnasamy Vidya Valli at BetterButter
55
7
0.0(0)
0

ஏத்தம்பழ பால் பாயசம்(பிரதமன்)

Mar-07-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஏத்தம்பழ பால் பாயசம்(பிரதமன்) செய்முறை பற்றி

கேரளாவின் மிகவும் பிரபலமான நேந்திரம்பழ பாயாசத்தை என் அம்மாவினுடைய ஸ்டைலில் செய்துள்ளேன். பண்டிகை நாட்களில் தேங்காய் பால் எடுத்து செய்வதற்கு நேரம் இருக்காது. தேங்காய் பாலிற்கு பதில் நார்மல் பால் சேர்த்தும் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஏத்தம்பழம் -1 (பெரியது)
  2. வெல்லம் - பொடித்தது 1/4 கப்
  3. பால் -2 கப்
  4. ஏலப்பொடி -1/4 தேக்கரண்டி
  5. நெய் -2 தேக்கரண்டி
  6. முந்திரி பருப்பு -6 முதல் 8
  7. தேங்காய் துருவல் -3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. நல்ல விளைந்த பழுத்த ஏத்தம்பழமாக எடுத்துக்கொள்ளவும்
  2. தோல் உரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  3. கடாயில் நெய் விட்டு முந்திரி மற்றும் தேங்காய் துருவலை வறுக்கவும்
  4. அதை தனியாக எடுத்து வைத்து விட்டு நறுக்கிய ஏத்தம்பழத்தை சேர்த்து வதக்கவும்
  5. ஒரு கப் பால் சேர்த்து வேக விடவும். பாதி வேகும் போதே கரண்டியால் சில துண்டுகளை மசித்துக்கொள்ளவும். பால் முழுவதும் வற்றியதும் இறக்கி தனியாக வைக்கவும்
  6. கடாயில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளவும்
  7. பச்ச வாசனை போனவுடன் பாலில் வேகவைத்த ஏத்தம்பழத்தை சேர்த்து கிளறவும்
  8. நன்றாக கிளறி ஏலப்பொடி தூவி இறக்கவும். ஆறவைத்து மீதமுள்ள பால் சேர்த்து நன்றாக கலந்து வறுத்த முந்திரி தேங்காய் துருவல் சேர்த்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்