வீடு / சமையல் குறிப்பு / மலாய் சிக்கன் கபாப்

Photo of Malai chicken kebab by Asiya Omar at BetterButter
534
7
0.0(0)
0

மலாய் சிக்கன் கபாப்

Mar-07-2018
Asiya Omar
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மலாய் சிக்கன் கபாப் செய்முறை பற்றி

ப்ரெஷ் கிரீம்,தயிர்,சீஸ் எல்லாம் சேர்த்து செய்வதால் செமையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • கிரில்லிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முதலில் ஊற வைக்க:-
  2. போன்லெஸ் சிக்கன் - 1/2 கிலோ
  3. மிளகுத்தூள் -1/2 தேக்கரண்டி
  4. லைம் ஜூஸ்-2 தேக்கரண்டி
  5. கரம் மசாலா - கால் தேக்கரண்டி
  6. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  7. உப்பு - தேவைக்கு.
  8. இரண்டாவது ஊற வைக்க:-
  9. ப்ரெஷ் கிரீம் -1 மேஜைக்கரண்டி
  10. கெட்டி தயிர் -1 மேஜைக்கரண்டி
  11. துருவிய சீஸ் -3 மேஜைக்கரண்டி
  12. வெண்ணெய் - 1 தேக்கரண்டி
  13. பச்சை மிளகாய் -2
  14. நறுக்கிய மல்லி இலை -2 மேஜைக்கரண்டி
  15. எண்ணெய் -1 தேக்கரண்டி
  16. உப்பு - மிகச் சிறிது.
  17. (எல்லாம் சேர்த்து அரைத்து எடுக்கவும்)

வழிமுறைகள்

  1. சிக்கன் அலசி தண்ணீர் சுத்தமாக வடிக்க வேண்டும். முதலில் ஊற வைக்கச் சொன்ன அனைத்து பொருட்களும் சேர்த்து ஊற வைக்கவும்.அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  2. இரண்டாவது ஊற வைக்க ,அரைக்க சொன்னதை அரைத்து எடுக்கவும்.
  3. அரைமணி நேரம் கழித்து அதனையும் சிக்கனில் சேர்த்து ஊற வைக்கவும் கிரீமியாக இருக்கும்.2-3 மணி நேரம் ப்ரிட்ஜில் ஊற வைக்கவும்.
  4. பின்பு கபாப் மரக்குச்சியை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற விடவும்.பார்பிகியூ அல்லது ஓவனில் சிக்கனுடன் வைக்கும் பொழுது கரியாகாது.
  5. மரக்குச்சியில் ப்ரிட்ஜில் இருந்து எடுத்து ஊற வைற்ற்ஹ சிக்கனை அடுக்கவும்.4 அல்கது 5 குச்சிகள் வரும்.
  6. பின்பு ஓவனை முற்சூடு செய்து 200 டிகிரி வெப்பநிலையில் பேக்கிங் ட்ரேயில் வைத்து 20-30 நிமிடம் வைத்து எடுக்கவும்.
  7. சுவையான மலாய் சிக்கன் கபாப் தயார்.மிண்ட் சட்னியுடன் பரிமாறலாம்.சிறிது சாட் மசாலா விரும்பினால் தூவலாம்.வெங்காயம்,கேரட்,முட்டைக்கோஸ் பொடியாக நறுக்கி அதன் மேல் கபாப் வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்