Photo of Kadai paneer gravey by அறிவு செல்வி at BetterButter
189
7
0.0(2)
0

Kadai paneer gravey

Mar-08-2018
அறிவு செல்வி
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

Kadai paneer gravey செய்முறை பற்றி

பன்னீர் வைத்து ஒரு முறை

செய்முறை டாக்ஸ்

  • ராஜஸ்தான்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. தேவையானபொருட்கள்: பன்னீர் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது) குடைமிளகாய் - 1 கப் (நறுக்கியது) வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)(அறுசுவை சமையல் சைவம்) கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... தக்காளி - 2 மல்லி - 1 டீஸ்பூன் வரமிளகாய் - 2

வழிமுறைகள்

  1. முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் மல்லி மற்றும் வரமிளகாயை லேசாக வறுத்து, பின் அவற்றை மிக்ஸியில் போட்டு, (அறுசுவை சமையல் சைவம்)அத்துடன் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைத்து, பின் பன்னீரை தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். (அறுசுவை சமையல் சைவம்)பின் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அத்துடன் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து, அத்துடன் மசாலா பொருட்களையும் சேர்த்து கிளறி தேவையான அளவு உப்பு தூவி பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும். பிறகு அதில் குடைமிளகாயை சேர்த்து 4 நிமிடம் வதக்கி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். (அறுசுவை சமையல் சைவம்)பின்பு அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கினால், கடாய் பன்னீர் கிரேவி ரெடி.....

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
pavumidha arif
Mar-08-2018
pavumidha arif   Mar-08-2018

Nice!!

Paramasivam Sumathi
Mar-08-2018
Paramasivam Sumathi   Mar-08-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்