வீடு / சமையல் குறிப்பு / ஜப்பானிய டோரா கேக்

Photo of Japanese Dora Cake by Sowmya Sundar at BetterButter
825
7
0.0(0)
0

ஜப்பானிய டோரா கேக்

Mar-09-2018
Sowmya Sundar
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஜப்பானிய டோரா கேக் செய்முறை பற்றி

ஜப்பான் நாட்டில் பிரபலமான டோரியாக்கி பான் கேக் இது. குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான டோரா கதாபாத்திரம் பேர் கொண்டதால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.சுலபமாக காலை அல்லது மாலை நேரத்தில் செய்து கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஜப்பானிய
  • பான் பிரை
  • விஸ்கிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா/ கோதுமை மாவு- 1 கப்
  2. பால் -1/2 கப்
  3. தேன் -2 டேபிள் ஸ்பூன்
  4. வெண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
  5. தயிர் -2 டேபிள் ஸ்பூன்
  6. பொடித்த சர்க்கரை - 1/2 கப்
  7. வெனிலா எசன்ஸ்-1/2 டீஸ்பூன்
  8. பேக்கிங் பவுடர்-1/2 டீ ஸ்பூன்
  9. நெய் - 1/4 கப் அளவு
  10. சாக்லேட் பில்லிங் செய்ய:
  11. கொக்கோ பவுடர்-1/4 கப்
  12. பொடித்த சர்க்கரை- 1/2 கப்
  13. பால் -1/4 கப்
  14. வெனிலா எசன்ஸ்-1/4 டீஸ்பூன்
  15. வெண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தயிர் வெண்ணெய், பால், தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கலந்து கொள்ளவும். பின் அதனுடன் மாவு,பேக்கிங் பவுடர், வெனிலா எசன்ஸ் சேர்த்து மெதுவாக கலக்கவும். இந்த கலவை சிறிது கெட்டியாக இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
  2. பானில் நெய் தடவி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை ஊத்தப்பம் போல ஊற்றவும். தேய்க்க வேண்டாம்.
  3. அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக வேக விடவும்.சுற்றிலும் ஒரு டீஸ்பூன் அளவு நெய் விடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கவும் .
  4. இதே போல அனைத்து பான்கேக்ஸ் செய்து கொளவும். பேக்கிங் பவுடர் சேர்ப்பதால் குமிழ் குமிழாக வந்து சாப்டாக இருக்கும்.
  5. சாக்லேட் ஃப்ராஸ்டிங் செய்ய கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் கொடுத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொண்டு அடுப்பை அணைத்து விடவும்.
  6. இதை ஒரு பான்கேக் மேல் முழ தடவி மற்றொரு பான் கேக்கால் மூடவும்.பின் பாதியாக கட் செய்து கொள்ளவும்
  7. சுவையான டோரா கேக் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்