ஷாகி பன்னீர் | Sahi paneer in Tamil

எழுதியவர் Wajithajasmine Raja mohamed sait  |  9th Mar 2018  |  
5 from 4 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Sahi paneer recipe in Tamil,ஷாகி பன்னீர், Wajithajasmine Raja mohamed sait
ஷாகி பன்னீர்Wajithajasmine Raja mohamed sait
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

3

4

ஷாகி பன்னீர் recipe

ஷாகி பன்னீர் தேவையான பொருட்கள் ( Ingredients to make Sahi paneer in Tamil )

 • பன்னீர் -150 கிராம்
 • தக்காளி -1
 • வெங்காயம் -1
 • இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள்- 1/2தேக்கரண்டி
 • மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
 • மல்லித்தூள்- 1 தேக்கரண்டி
 • கரம்மசாலா -1/2 தேக்கரண்டி
 • பட்டை -1-2
 • ஏலக்காய் - 3
 • கிராம்பு -3
 • பிரியாணி இலை - சிறிதளவு
 • சீரகம் - 1/2 தேக்கரண்டி
 • பாதாம் -5
 • முந்திரி - 6
 • வெண்ணெய் -2 தேக்கரண்டி
 • பிரஷ் கிரீம் -1/2 கப்
 • உப்பு - தேவையான அளவு
 • மல்லி இலை - சிறிதளவு

ஷாகி பன்னீர் செய்வது எப்படி | How to make Sahi paneer in Tamil

 1. தேவையான பொருட்கள்
 2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பட்டை,ஏலக்காய் ,கிராம்பு ,பிரியாணி இலை சேர்க்கவும்
 3. பின்பு நறுக்கிய வெங்காயம்,பாதாம் ,முந்திரி சேர்த்து வதக்கவும்.
 4. இப்பொழுது நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,மல்லித்தூள்,கரம்மசாலா,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
 5. இப்பொழுது அடுப்பில் இருந்து இறக்கி சூடு குறைந்த்தும் மிக்சியில் நன்கு அரைத்துக்கொள்ளவும்.
 6. கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேரக்கவும்.
 7. பின்பு அரைத்து விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
 8. இதனுடன் 1/2 கப் பிரஷ்கிரீம் சேர்த்து 5 கிளறவும்.
 9. பின்பு பன்னீர் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் வேகவைத்து அடுப்பில் இருந்து இறக்கி மல்லி இலை தூவி பரிமாறவும் .
 10. ஷாகி பன்னீர் தயார்.சப்பாத்தி ,நான்,பரோட்டாவிற்கு அருமையான சைட் டிஷ்.

எனது டிப்:

பிரஷ்கிரீம் இல்லை என்றால் தயிர் சேர்க்கவும்.

Reviews for Sahi paneer in tamil (4)

Lalitha Venkata year ago

Rich creamy
Reply
Wajithajasmine Raja mohamed sait
a year ago
yes dear...

Rajamohamed Saita year ago

Yummy
Reply
Wajithajasmine Raja mohamed sait
a year ago
thank you

Priya Mohana year ago

Reply

Hameetha Banua year ago

Super
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.