Photo of Sahi paneer by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
723
11
0.0(4)
0

Sahi paneer

Mar-09-2018
Wajithajasmine Raja mohamed sait
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Sahi paneer செய்முறை பற்றி

ஷாகி பன்னீர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பன்னீர் -150 கிராம்
  2. தக்காளி -1
  3. வெங்காயம் -1
  4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள்- 1/2தேக்கரண்டி
  6. மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
  7. மல்லித்தூள்- 1 தேக்கரண்டி
  8. கரம்மசாலா -1/2 தேக்கரண்டி
  9. பட்டை -1-2
  10. ஏலக்காய் - 3
  11. கிராம்பு -3
  12. பிரியாணி இலை - சிறிதளவு
  13. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  14. பாதாம் -5
  15. முந்திரி - 6
  16. வெண்ணெய் -2 தேக்கரண்டி
  17. பிரஷ் கிரீம் -1/2 கப்
  18. உப்பு - தேவையான அளவு
  19. மல்லி இலை - சிறிதளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பட்டை,ஏலக்காய் ,கிராம்பு ,பிரியாணி இலை சேர்க்கவும்
  3. பின்பு நறுக்கிய வெங்காயம்,பாதாம் ,முந்திரி சேர்த்து வதக்கவும்.
  4. இப்பொழுது நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,மல்லித்தூள்,கரம்மசாலா,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. இப்பொழுது அடுப்பில் இருந்து இறக்கி சூடு குறைந்த்தும் மிக்சியில் நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  6. கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேரக்கவும்.
  7. பின்பு அரைத்து விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
  8. இதனுடன் 1/2 கப் பிரஷ்கிரீம் சேர்த்து 5 கிளறவும்.
  9. பின்பு பன்னீர் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் வேகவைத்து அடுப்பில் இருந்து இறக்கி மல்லி இலை தூவி பரிமாறவும் .
  10. ஷாகி பன்னீர் தயார்.சப்பாத்தி ,நான்,பரோட்டாவிற்கு அருமையான சைட் டிஷ்.

மதிப்பீடு (4)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lalitha Venkat
Mar-10-2018
Lalitha Venkat   Mar-10-2018

Rich creamy

Rajamohamed Sait
Mar-09-2018
Rajamohamed Sait   Mar-09-2018

Yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்