வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி தகி கோதுமை அவல் இட்லி

Photo of Spicy Dahi wheat flakes idly by Krishnasamy Vidya Valli at BetterButter
307
5
0.0(0)
0

ஸ்பைசி தகி கோதுமை அவல் இட்லி

Mar-10-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி தகி கோதுமை அவல் இட்லி செய்முறை பற்றி

இப்பொழுதெல்லாம் விதவிதமான அவல்கள் கிடைக்கிறது. அவற்றுள் கோதுமை அவலை வைத்து தயிர் இட்லி செய்துள்ளேன். கொஞ்சம் மசாலா சேர்ப்பதால் தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. குழந்தைகளுக்கு ஏற்ற டிபன் வெரைட்டி இது. ஒருவருக்கு மூன்று வீதம் நான்கு நபர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை அவல் -11/2 கப்
  2. கெட்டி தயிர் -3/4 கப்
  3. அரிசி மாவு/கோதுமை மாவு -2 தேக்கரண்டி
  4. உப்பு -1 தேக்கரண்டி
  5. தேங்காய் துருவல் -2 மேஜைக்கரண்டி
  6. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது 2 தேக்கரண்டி
  7. மசாலாவிற்கு தேவையானவை
  8. வெங்காயம் -1
  9. தக்காளி -1
  10. பச்ச பட்டாணி -2 மேஜைக்கரண்டி
  11. உப்பு -1/2 தேக்கரண்டி
  12. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  13. காரப்பொடி -1/4 தேக்கரண்டி
  14. கரம் மசாலா -1/4 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
  15. தனியா பொடி ,சீரகப்பொடி, மிளகுபொடி -தலா 4 சிட்டிகை(விருப்பப்பட்டால்)
  16. தாளிக்க
  17. எண்ணெய் -1/2 தேக்கரண்டி
  18. கடுகு -1 தேக்கரண்டி
  19. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  20. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  21. பெருங்காயம் -4 சிட்டிகை
  22. பச்ச மிளகாய் -1

வழிமுறைகள்

  1. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பச்ச வாசனை போனவுடன் பச்ச பட்டாணி தக்காளியை சேர்த்து வதக்கவும்
  3. அதிகமாக வதக்க தேவையில்லை. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்
  4. அவலில் தயிர் அரிசி/கோதுமை மாவு உப்பு சேர்த்து கிளறவும்
  5. அதோடு வதக்கிய காய்கள் தேங்காய் துருவல் கொத்தமல்லி இலையை சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. இட்லி தட்டில் எண்ணெய் தடவி வேகவைக்கவும்
  7. அதிக நேரம் வேக வேண்டியது இல்லை.வெந்தவுடன் எடுத்து இரண்டு நிமிடங்கள் கழித்து பறிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்