வீடு / சமையல் குறிப்பு / கறிவேப்பிலை நெல்லி சட்டினி/ கறிவேப்பிலை ஆம்லா சட்டினி

Photo of Karuvepilai Neli Chutney/ Curry Leaves Amla Chutney by Rathy V at BetterButter
2630
73
4.7(1)
0

கறிவேப்பிலை நெல்லி சட்டினி/ கறிவேப்பிலை ஆம்லா சட்டினி

Mar-18-2016
Rathy V
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • கண்டிமென்ட்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கறிவேப்பிலை - 1கப்
  2. நெல்லிக்காய் - சிறியது 3
  3. இஞ்சி - 1 சிறிய துண்டு
  4. தேங்காய் துருவல் - 1/4 கப்
  5. பச்சை மிளகாய் -2
  6. உளுத்தம்பருப்பு 2 தேக்கரண்டி
  7. தேவையான உப்பு
  8. எண்ணெய் 2 தேக்கரண்டி
  9. தாளிப்புக்கு:
  10. கடுகு - 1/2 தேக்கரண்டி
  11. சிவப்பு மிளகாய் - 2
  12. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  13. எண்ணெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. விதை நீக்கப்பட்ட நெல்லிக்காயைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடுபடுத்தி உளுத்தம்பருப்பைச் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
  3. இப்போது கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  4. நெல்லிக்காய், மிளகாய், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
  5. தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பத்து விநாடிகளுக்க வதக்கி அடுப்பை நிறுத்தவும்.
  6. ஆறட்டும். பிறகு ஒரு மிக்சியில் எடுத்துக்கொள்ளவும்.
  7. தேவையான உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சட்டினியாக அரைத்துக்கொள்ளவும்.
  8. அனைத்தையும் நன்றாக அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.
  9. தாளிப்பதற்காக எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு சேர்க்கவும். அது பொறிந்ததும் சிவப்பு மிளகாய் பெருங்காயத்தைக் கலந்து அடுப்பை நிறுத்தவும்.
  10. சட்டினி உள்ள பாத்திரத்தில் சேர்க்கவும். இட்லி/தோசையுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kalai Vani
Jul-10-2019
Kalai Vani   Jul-10-2019

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்