வீடு / சமையல் குறிப்பு / சீஸ் மசால் தோசை

Photo of Cheese masal dosai by Krishnasamy Vidya Valli at BetterButter
408
5
0.0(0)
0

சீஸ் மசால் தோசை

Mar-10-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சீஸ் மசால் தோசை செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு இது.செய்வது சுலபம் தான்.மசாலாவை ஏற்கனவே செய்து வைத்துவிட்டு பள்ளி விட்டு குழந்தைகள் வந்தவுடன் சூடாக தோசை வார்த்து கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தோசை மாவு -2 குழம்பு கரண்டி
  2. சீஸ் -1/2 கப் துருவியது
  3. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது- 1 தேக்கரண்டி
  4. மசாலாவிற்கு தேவையானவை
  5. வெங்காயம் -1
  6. தக்காளி -1
  7. உருளைக்கிழங்கு -1
  8. உப்பு -1/ 2 தேக்கரண்டி
  9. காரப்பொடி -1/4 தேக்கரண்டி
  10. கரம் மசாலா -1/4 தேக்கரண்டி
  11. மஞ்சள் பொடி -2 சிட்டிகை
  12. தாளிக்க
  13. எண்ணெய் -1/4 தேக்கரண்டி
  14. சீரகம் -1/4 தேக்கரண்டி
  15. தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. உருளைக்கிழங்கு தக்காளியை உப்பு மற்றும் பொடிகள் சேர்த்து வதக்கவும்
  4. மசாலாவை தனியாக எடுத்து வைக்கவும்
  5. தோசை கல்லில் ஒரு கரண்டி மாவை லேசான தோசையாக எண்ணெய் விட்டு வார்க்கவும்
  6. அதன்மேல் செய்து வைத்த மசாலாவை ஸ்பிரட் செய்யவும்.
  7. அதன் மேல் துருவிய சீஸ் மற்றும் கொத்தமல்லி இலையை தூவவும்
  8. தோசையை திருப்பிப்போட தேவையில்லை.ஓரங்களை மட்டும் மடித்து விடவும்
  9. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. அப்படியே பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்