சீஸ் கேக் | Cheese cake in Tamil

எழுதியவர் Juvaireya R  |  10th Mar 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Cheese cake by Juvaireya R at BetterButter
சீஸ் கேக்Juvaireya R
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  40

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

4

1

சீஸ் கேக் recipe

சீஸ் கேக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Cheese cake in Tamil )

 • 140 கிராம் சீஸ்
 • 60 கிராம் வெண்ணெய்
 • 50 கிராம் பால்
 • 80 கிராம் மைதா
 • 80கிராம் பொடித்த சர்க்கரை
 • 5 முட்டை
 • 1 தேக்கரண்டி வெண்ணிலா எஸ்ஸென்ஸ்

சீஸ் கேக் செய்வது எப்படி | How to make Cheese cake in Tamil

 1. பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடேற்றவும்
 2. அதனில் வெண்ணெய், கீரீம் சீஸ் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.
 3. ஒரு பாத்திரத்தில் முட்டை மஞ்சள் கரு சேர்த்து அடித்துக்கொள்ளவும்.
 4. அக்கலவையில் பால் மற்றும் சீஸ் கலவையையும் சேர்த்து கலக்கவும்.
 5. மஞ்சள் கருவில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்க்கவும்.
 6. பின் வேறு ஒரு பாத்திரத்தில் முட்டை வெள்ளை கருவை ஊற்றவும்.
 7. நன்றாக நுறை பொங்க மின் கலவையால் அடித்துக் கொண்டே பொடித்த சர்க்கரையை சேர்க்கவும்.
 8. கீரிம் பதத்திற்கு வந்ததும் மின்கலவையை அணைக்கவும்.
 9. மாவு கலவையில் அடித்து வைத்துள்ள முட்டை வெள்ளை கரு கலவையை சேர்த்து கலக்கவும்.
 10. பின் கேக் பாத்திரத்தில் வெண்ணைய் தாள் போட்டு கேக் கலவையை சேர்க்கவும்.
 11. நுண்மின்அடுப்பில் 150 டிகிரி வெப்பநிலையில் 40 நிமிடம் பேக் செய்யவும்.
 12. கேக் வெந்ததும் ஆரிய பிறகு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
 13. கீரிம் சீஸ் கேக் தயார்.

Reviews for Cheese cake in tamil (1)

Vasuyavana 2 years ago

Love the texture
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.